ஆமா இந்த திரைப்படம் யாரு?? யாரு?? பாக்கணும் .. எல்லாரும் . உறுதியாக பாக்கணும் , கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்று சொல்லிவிட்டேன் ஏன் பார்க்கவேண்டும் என்பதனையும் சொல்லி விடுகிறேன் .
ப்ளாக்காமெடி த்ரில்லர் வகையில் Damián Szifron
இயக்குனர், நம்மில் மறைந்து இருக்கும் பல வக்கிர எண்ணங்களையும் , பழிவாங்கும் எண்ணங்களையும். வெவ்வேறு கோணங்களில் வித விதமான தொடர்பான ஆறு கதைகளின் மூலம் தெளிவு படுத்திக்காட்டுகிறார் . அதிலும் மூன்றாவது கதை மாஸ்டர் பீஸ் .. தலைபிற்கும் கதைக்கும் பொருந்துகின்ற மாதிரி மிரட்டலான கதாபாத்திரங்கள் தான் ,
1.PASTERNAK
யார் இந்த PASTERNAK ?? முதலில் விமானத்தில் ஒரு பெண்ணுக்கும் இன்னொரு இசை விமர்சகருக்கும் ஒரு சிறு கலந்துரை ,
பிறகு விமானத்தில் வரும் அத்தனை பேரும் அதில் கலந்து கொள்கின்றனர் .. தீடீர் ன்னு ஒரு ஷாக் அது என்ன ஷாக் ? என்ன கலந்துரை ? ஏன்? என்ற கேள்விகளுக்கு பதில் முதல் பத்துநிமிடத்தில் உள்ளது இது இசையில் பின்னி பெடல் எடுத்து இருப்பாங்க ..
2.THE RATS
ஆளே இல்லாத ரெஸ்டாரன்ட் க்கு ஒருவன் வருகிறான் , இவன். அங்கு வேலைபார்க்கும் பெண்ணின் குடும்பத்திற்கு விரோதி. என்பதை அவள் பார்த்த வுடன் கண்டுனர்கிறாள் , அதனை அவள் சமையல் செய்பவளிடம் சொல்கிறாள் , பிறகு சமயலாலி ஒரு திட்டம் தீட்டுகிறாள்????
என்ன திட்டம் தீட்டினார்கள் ?? என்ன நடந்தது என்பது மிரளவைக்கும் மீதி கதை . சமையல் செய்கிற மேடம் தான் மிரட்டல் .
மூன்று முறை சிரித்தேன்(நீங்களும் பாக்கும் பொது சிரிப்பீங்க) , பிறகு விறுவிறுப்பை கிளப்பி விட்டார்கள் ,
3. THE STRONGEST
மாஸ்டர் பீஸ் என்னை வெகுவாக கவர்ந்த கதை . ஒரு ஹைவே ரோடு அதுல ரெண்டு காரு , அதுக்குள்ள ரெண்டு பேரு , இவங்களுள்ள வீம்பு இறுதியில் என்ன ஆனது ??
இதை மட்டுமே சொல்ல விரும்புகின்றேன் வேறெதையும் தெரிந்துகொள்ளாதீர்கள் .
நாம் பயணம் செய்யும் பொது நிறைய சேஷ்டைகளை செய்வோம். . உதாரனத்திற்கு ஒருவனை முந்தி விட்டு நான்தான் எல்லாம், கைய ஆட்டி காமிகிறது , எதோ ஒரு கெத்தா ஒரு வேலைய காற்றது , அப்படி ரோட்டில் நடக்கும் ஒரு கதை தான் , நிச்சயமாக சொல்லுறேன் நீங்க பார்க்கும் முன்பு என்ன வேணாலும் யூகித்து கொள்ளுங்கள் ஆனால் அது நடக்காது , இது முழுக்க முழுக்க வேறு பார்த்து உணரவும் :)
4.LITTLE BOMB
தன்னோட மகளின் பிறந்தநாளுக்கு சரியான நேரத்தில் செல்லமுடியவில்லை, அதற்கு முக்கிய காரனமாய் ஒரு பிரச்சனை அமைகிறது , பல பிரச்சனை வர , ஒருகட்டத்தில் பொங்கி எழுகிறார் , ? அதென்ன பிரச்னை ? சத்தியமா இதுவும் நீங்க யூகிக்க மாதிரி இல்லை வேறு ஒரு நல்ல கதை . பாருங்கள்
5. THE PROPOSAL
கர்ப்பிணி பெண் ஒருத்தரை காரில் இடித்து விடுகிறார் ஒருவர் , இடித்து விட்டு நிக்காமல் சென்று விடுகிறான் . இடித்தவனை போலிஸ் தேடுகிறது என்ன ஆனது என்பதை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் , இதில் நடித்திருக்கும் அப்பா கதாபாத்திரம் அட்டகாசம் , வழக்கமாக ஒரு பணக்கார வீட்டு பையன் இப்படி செய்திட்டான் என்ன நடக்கும் அப்படின்னு நினச்சி தான் பார்த்தேன் நடந்தது என்னவோ அதான் அனா கதைபடுத்த பட்டிருக்கும் விதமும் இறுதியும் கண்ணில் தண்ணீர் வரவைத்து விட்டது .
6. UNTIL DEATH TO US PART
இந்த கதை தான் கொஞ்சம் இழுத்த மாதிரி இருக்கு ன்னு பார்த்தேன் ஆத்தாடி ஆத்தாடி குரும்படத்துகுள்ள எம்புட்டு வேலை காட்றாங்க . சிரிக்கிறதா சீரீசா பாக்குறதா , எங்க போய் எங்க வந்து விடுவாங்க கதைய . பக்கவா இருக்கிறது நடிகையின் தேர்வு , மூன்றாவது படம் என்னை வெகுவாக கவர்ந்தது மீதி அனைத்துமே அட்டகாசம் .
ஆக ஆறு கதைகளிலும் எதையுமே உங்களால் யூகிக்க முடியாது அந்த அளவில் தான் இருக்கும் , மிரட்டலான இசை , அட்டகாசமான நடிப்பு . மிக சிறந்த இயக்கம் , கண்டிப்பாக, நிச்சயமாக,உறுதியாக , உடனடியாக இன்னும் என்ன என்ன இருக்கு ஆ!!! இறப்பதக்குள் பார்த்துவிட வேண்டிய கட்டாயமான திரைப்படம் .
திரைப்பட விழாக்களிலும் மற்றும் சிறந்த அயல் நாட்டு திரைப்பட பிரிவில் கலந்துகொண்ட , மேலும் பல விருதுகளை அள்ளிய திரைப்படம் பத்துக்கு பத்து கண்ண மூடிக்கொண்டு போடலாம் . பார்த்தவர்கள் தங்கள் கருத்துகளை சொல்லுங்கள் , பார்க்காதவர்கள் உடனடியாக பாருங்கள் .
நன்றி .
நல்ல பகிர்வு..எனக்கு மிகவும் பிடித்தது pasternak இல் கடைசியாக அவன் அம்மா அப்பாவை நோக்கி வரும் விமான காட்சியே <3
ردحذفஅவன் பிறந்ததில் இருந்து , அவன் கூட அருகில் விமானத்தில் அமர்ந்து இருந்த பயணி வரை , ஒட்டுமொத்தமாக இப்படி செய்ய என்ன காரணமா ?? இருக்கும் ன்னு பல கேள்வி எழுந்தது என் மனதில் நானும் எனக்கே ஒரு பதிலை சொல்லிக்கொண்டு அடுத்த படத்திற்கு கடந்து விட்டேன் , இதுவரை யாருமே யோசிக்காத யோசனையா இருந்தது பத்து நிமிடம் பக்கவான படம்
ردحذفإرسال تعليق