October (Ten Days that Shook the World) (1928) உலகை குலுக்கிய பத்து நாள்கள்

"உலகை  குலுக்கிய  பத்து நாள்கள்"  என்ற  புத்தகத்தின்  திரைப்பட  வடிவமே  இந்தப்படம்  , விவரம்  தெரியாமல்  நிறைய(சார்லி  சாப்ளின்)  மௌன  படங்கள்   பார்த்திருக்கிறேன் , இப்போது  இந்த  உலகை  குலுக்கிய  பத்து நாள்களை  பாதிக்கு  மேல்  புரிந்துகொள்ள  முடியாமல்  போனை  நோண்டிக்கொண்டு   பார்த்துகொண்டு  இருந்தேன் , 


ஆரம்பத்தில்  நகர  நகர  துப்பாக்கி  சூடு  , மக்கள்  ஓட்டம்  , கழகம் , புரட்சி , ன்னு  பர  பரப்பாக  நகரும்  , எனக்கு  நினைவில்  நிறைய  காட்சிகள்  இல்லை , நான்  சரியாக  கவனித்திருக்க  வில்லை  பொறுமை  இல்லை  என்பதே  சரியாக  பொருந்தும் . என்னுடைய  நினைவில்  இருப்பதை  வைத்து  ஒரு  அறிமுகத்தை  சொல்கிறேன் . 

சோவியத்  அரசு  ஆட்சி காலத்தில்  தயாரிக்க  பட்ட  இந்த திரைப்படம் 1928 ஆம்  ஆண்டு  செர்ஜி ஜசன்ஸ்டைன் என்பவரால்  இயக்கப்பட்டது , மக்கள்  புரட்சி  ஆரம்பம்  ஆகிறது , நகரத்திற்கு  மற்றவர்கள் வரக்குடாது  என்று  உத்தரவிடுகின்றனர் .  பிறகு  அங்கு  ஒருவர்  வருகிறார்? பிறகு  என்ன  மாற்றம்  நிகழ்ந்தது ? என்ன  மாற்றம்  ஆனது  என்பதெல்லாம்  மீதி ?? 

ஒவ்வொரு  காட்சியும்  டாக்குமெண்டரி  போல்  காட்சிபடுத்த பட்டிருக்கும்  , கிட்ட  தட்ட  அதுவே  தான்  , கொஞ்சம்  வேகமாக  செல்வது  போல  இருக்கிறது .  ஒவ்வொரு  முறையும்  டக்  டக்  என்று  போய்  விட்டது .  மீண்டும்  ஒருநாள்  நேரம்  கிடைக்கும்  பொழுது  இதனை  இணையத்தில்  தேடி  பொறுமையாக  பார்க்கவேண்டும்  என்று  நினைக்கிறன் . 

ஏற்கனவே  யாரவது  பார்த்து  விளக்கமாக  எழுதி  இருந்தால் மற்றவர்களுக்கும்  பகிருங்கள் , பார்க்காதவர்கள்  இணையத்தில்  இருக்கிறது  பாருங்கள் 




நன்றி 




Post a Comment

أحدث أقدم