12 Angry Men (1957) ஒரு அறையும் 12 கோவக்காரர்களும்



நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை , இந்த திரைப்படம் உலகில் மிகச்சிறந்த கருப்பு வெள்ளை திரைப்படங்களில் ஒன்று , தலைசிறந்த படங்களில் முதல் பத்து இடங்களில் இடம்பெற்றுள்ள திரைப்படம். மூன்று வெவ்வேறு துறைகளில் ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது , மேலும் பல விருதுகளை குவிதுத்துள்ளது, 1957 ல் இருந்து இன்று வரை சாதனை செய்து கொண்டுள்ள சாதனை திரைப்படம்.

உலகின் புகழ் பெற்ற இயக்குனர்களின் ஒருவரான சிட்னி லும்மேட் இயக்கிய திரைப்படங்கள் ஒவ்வோவ்ன்றும். ஒவ்வொரு விதம் .. அவரை பற்றி பேசுகிறார்களோ இல்லையோ அவர் திரைப்பயணங்கள் பற்றி சினிமா துறை இன்றும் பேசிக்கொண்டு இருக்கிறது, இவர் இயக்கிய திரைப்படங்களில் இருந்து ஒவ்வொரு துறையில் பார்க்கையில் 46 ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரை செய்ய பட்டிருகிறது, குறிப்பாக இவரோட நெட்வொர்க் திரைப்படம் பத்து விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு நாலினை வென்றுஇருக்கிறது, இவர்ருடைய மற்ற படங்களை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பினை இந்த திரைப்படம் எனக்கு தூண்டி விட்டுள்ளது.


படத்தின் தொடக்கத்தில் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ள படுகிறது,அதில் பதினெட்டு வயது நிரம்பிய ஒருவன் தன்னோட தந்தையை கொன்ற வழக்கில் கைதி செய்யபட்டு குற்றவாளி யாக நிற்கிறார்,இவருக்காக யாரும் வாதட வில்லை, இவர்தான் அந்த கொலையை செய்திருப்பார் என ஒட்டுமொத்தமாக இவர்மேல் வீச படுகிறது,

அமெரிக்காவில் இப்படி ஒரு சட்டம் இருந்ததா இல்லை யா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை, இந்த விசாரணையை பன்னிரண்டு பேர் கொண்டகுழுவிடம் ஒப்படைக்க படுகிறது . யார் அந்த பன்னிரண்டு பேர்? (இந்த பன்னிரு ஜூரிக்களும் சமூகத்தின், பொதுபுத்தியின் பல்வேறு அடுக்களை சார்ந்த மனிதர்கள்.கொலை செய்தவன் ஆக கருதப்படும் பகுதியை சேர்ந்தவர்கள்,, இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு துறையில் எக்ஸ்பெர்ட். நீதிமன்றம் மூலம் நோட்டிஸ் அனுப்பி இவர்கள் வரவழைக்க படுகிறார்கள்..


பிறகு விவதாம் தொடங்குகிறது? உள்ளே நுழைந்து சிறிது நேரத்தில் தொடங்குகிறது இதில் தொடக்கத்திலே வோட் அடிப்டையில் அதாவது எதனை பேரு அவனை குற்றவாளி என்றும் எதனை பேரு குற்றவாளி இல்லை என்றும் சொல்லுகின்றனர் என்று கணக்கெடுக்க படுகிறது. பதினோரு பேர் அவன் குற்றவாளி என்கிறார்கள் மீதி ஒருவர் அவன் குற்றவாளி இல்லை என்கிறார்?? ஒன்றும் இல்லை இவர் ஒரு நிறபராதி குற்றவாளி ஆகி விட கூடாது என்பதற்காக நாம் பேச வேண்டும் என்கிறார் ? அதற்கு எதிர்பேச்சு தான் எழுகிறது,

முடிவில் என்னதான் ஆனது? இவன் குற்றவாளியா ?? இல்லையா ??? பன்னிரண்டு பேருடைய கருத்து என்ன.. என்பதை நிச்சயமாக நீங்கள் பார்த்து தான் தெரிந்துகொள்ள வேண்டும். பார்த்து முடித்த பிறகு இந்த மாதிரியான சட்டம் நம்மிடம் இருந்திருக்குமா?? இருக்குமா?? என்பதை பற்றிய கருத்துக்களை மறக்காமல் பகிருங்கள்..

எனக்கு ஒரே ரூமில் முழுக்க முழுக்க ஒரு கதைய முடிக்கும் படங்கள் என்றால் ரொம்ப விருப்பம், அப்படி பட்ட வகையில் நான் பார்த்த திரைப்படங்கள் என்னுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தவையில் சில(Buried,Break,Exam,1408,Cube,The Mist,Devil,Saw,Phone booth) கிட்ட தட்ட ஒரே ரூமில் எடுக்க பட்ட படங்கள் தான்.. இந்த வரிசையில் இப்போது இந்த படத்தை முதலாக வைக்கிறேன்.

இந்த திரைபடத்தை பார்த்து இருப்பீர்கள் என்று நினைக்கிறன், ஒருவேளை பார்க்க வில்லை என்றால் விரைவில் பார்க்கவும் , தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும்.

நன்றி

#சிவஷங்கர்

Post a Comment

أحدث أقدم