அமெரிக்காவில் இருந்து ஜிம்மி தனது தாயகமான அயர்லாந்துக்கு வருகிறான் , தனது தாயை சந்தித்து பிறகு அந்த ஊரில் ஒரு அரங்கை நிறுவ வேண்டும் என்பது இவனுடைய ஆசை , அதென்ன அரங்கம் ??? மற்றவர்களுக்கும் ஆடவும் , பாடவும் , புத்தகம் படிக்கவும் , கலந்துரை செய்யவும் , கற்றுகொடுக்கவும் அதுவும் இலவசமாக , என அவனுடைய ஆசை நல்ல ஆசையாக தான் இருக்கிறது , இதன் மூலம் தெரியாத நிறைய தகவல்களை தெரிந்துகொள்ளலாம் என அரங்கை நிறுவுகிறான் .
அரங்கில் பாட்டு சொல்லிகொடுத்து கொண்டு இருக்கும் பொழுது தீடீரென்று ஒரு குழு வந்து தகராறு செய்ய ஆரம்பிகிறது. ஜிம்மி கைதி செய்ய வந்திருப்பாக சொல்கிறார்கள் , அங்கிருந்து அரங்கில் இருந்தவர்கள் ஜிம்மியை வெளியே அனுப்பி விடுகிறார்கள்.
இவனுக்கு நிறைய எதிர்ப்பாளர்கள் கிளம்ப ஆரம்பிரார்கள் , இருந்தாலும் இளைஞர்கள் உதவியுடன் அந்த அரங்கம் செயல்படுத்த பட்டு கொண்டு வருகிறது , கைதி செய்யபடுகிறான் , பிறகு என்ன ஆனது என்பதை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் . இறுதியாக என்ன ஆனது என்ன ஆகி இருக்கும் என்பதை நேரம் அமைந்தால் பார்த்து வைக்கவும் ..
திரைபடவிழாக்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்று இருக்கிறது , எனக்கு ரொம்ப பொறுமையாக படம் நகருவது போன்று இருந்தது . பொறுமை அவசியம் பார்த்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை சொல்லுங்கள் , பார்த்தவர்கள் கருத்துரை இடுங்கள் .
நன்றி
إرسال تعليق