இந்த திரைப்படத்திற்கு கதை ஒன்றும் பலமாக இல்லை , நான் பார்க்க முக்கிய காரணம் பர்க்கூர் என்கிற அந்த விளையாட்டுக்கு தான் , பாரிஸ் நகரில் பொழுதை போக்க இளைஞர்களில் இருந்து எல்லோரும் பில்டிங் க்கு பில்டிங் தாவி தாவி சாகசம் பண்ணுறது தான் அந்த விளையாட்டு . ஆனா போகிற போக்கில் கொள்ளை அடிப்பதற்கும் , சில பல கைமாற்று வேலைக்காகவும் இந்த பர்க்கூர் ஐ தெரிந்துகொண்டு சிலர் கலந்து கட்டி அடிக்கின்றனர் . இந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த படம் என்றால் District 13 சீரீஸ் தான் . கதையிலும் அசத்தி இருப்பார்கள் .
இந்த படத்தை எப்போது பார்த்தாலும் முதல் முறை பார்க்கிற அனுபவம் போல தான் இருக்கும் . அதில் நடித்த David belle அசத்தி இருப்பார் . நிச்சயமாக நீங்க District 13 1,2 ஐ பார்த்திருக்க வேண்டும் .இந்த படத்தை பற்றி எழுதினால் கிட்ட தட்ட ரெண்டு மூணு பக்கம் போகும் , அந்த நடிகரை பற்றியும் நிறைய சொல்லலாம் அதை பற்றி பிறகு சொல்லுகிறேன் . சமீபத்தில் கூட ஒரு பெண் இந்த பர்க்கூர் பில்டிங்க்கு பில்டிங் அசத்திய காட்சிகள் இணையத்தில் வைரலானது , பக்கமாக வந்த மலையில் சைக்கிளில் வித்தை காட்டிய ஒருவரின் வீடியோ அனைவரையும் அச்சுறுத்தியது . சரி இந்த படத்தை பற்றி பார்ப்போம் .
ஹீரோ ஒரு கொரியர் பாய் , அவன் வேலையே அதுதான் . சைக்கிளில் முந்திக்கொண்டு செல்லுவதில் கெட்டிக்காரர் , ஒருநாள் எதிர்பார்த்த விதமாக ஒரு பெண் இவள் மீது மோதுகிறாள் அங்கிருந்து நட்பு வளர்கிறது . இவனுக்கு கடன் பிரச்சனை வேறு இருக்கிறது அவன் வேற அடிக்கடி வந்து இருக்கிறத பிடுங்கி கொண்டு போறதும் . வார்னிங் கொடுத்து போகுறதும் வழக்கம் . முதல்ல மோதுன பெண் செய்யும் அந்த பர்க்கூர் பார்த்து அதை கற்றுக்கொள்ள முயல்கிறான் . பிறகு அவங்க டீம் ல சேர்ந்து கொண்டு கொள்ளை அடிக்கிறான் . சிக்கலில் சிக்கிகொண்ட இவன் எப்படி தப்பிக்கிறான் . இறுதியில் தன்னுடைய கடனை அடைத்தானா இல்லையா ? என்பதெல்லாம் மீதி கதை .
கொள்ளையடிக்கும் காட்சிகளையும் , திட்டம் தீட்டும் காட்சிகளையும் சுவாரஸ்ய படுத்தி இருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும் .
கதை சுவாரஸ்யம் இல்லை என்பது பார்க்கும் பொது எனக்கும் புரிந்தது . இருந்தாலும் அந்த பர்க்கூர் காட்சிகளுக்ககவும் தப்பிக்கும் காட்சிகளுக்காகவும் தாரளாமாக பார்க்கலாம் . நெட்ப்ளிக்ஸ் வைத்திருப்பவர்கள் அதில் பார்க்கலாம் . youtube ல் 25 பணம் கட்டி HD தரத்தில் பார்க்கலாம் . மேலேயே சொல்லிவிட்டேன் இது எல்லோருக்கும் பிடிக்கும் படமா ன்னு சொல்ல முடியாது , நான் பார்க்கூர் காட்சிகளுக்காக பார்த்தேன் . பிறகு நோட்டை கொட்டை ன்னு சண்டைக்கு வந்தா கம்பெனி பொறுப்பாகாது. கேமரா ஏங்கில்களில் லாம் அசத்தி இருப்பார்கள் . வருங்கால கேமரா மேன்கள் நீங்கள் இந்த படத்தை தாரளாமாக பார்க்கலாம் இணையத்தில் அந்த மேக்கிங் பற்றி பாருங்கள்
நன்றி
#சிவஷங்கர்

Post a Comment