Tracers (2015) தடைகளை தாண்டோடுபவன்

இந்த  திரைப்படத்திற்கு கதை  ஒன்றும்  பலமாக  இல்லை , நான்  பார்க்க  முக்கிய  காரணம்  பர்க்கூர் என்கிற  அந்த  விளையாட்டுக்கு  தான் , பாரிஸ்  நகரில்  பொழுதை  போக்க இளைஞர்களில் இருந்து  எல்லோரும்  பில்டிங்  க்கு  பில்டிங்  தாவி  தாவி  சாகசம்  பண்ணுறது  தான் அந்த  விளையாட்டு  . ஆனா  போகிற  போக்கில்  கொள்ளை  அடிப்பதற்கும் , சில  பல  கைமாற்று  வேலைக்காகவும்  இந்த  பர்க்கூர் ஐ  தெரிந்துகொண்டு சிலர்   கலந்து  கட்டி  அடிக்கின்றனர் .   இந்த  வகையில்  எனக்கு  மிகவும்  பிடித்த  படம்  என்றால் District 13 சீரீஸ்  தான் . கதையிலும்  அசத்தி  இருப்பார்கள் .





இந்த படத்தை எப்போது  பார்த்தாலும்  முதல்  முறை  பார்க்கிற  அனுபவம்  போல  தான்  இருக்கும் . அதில்  நடித்த David belle அசத்தி  இருப்பார் . நிச்சயமாக  நீங்க  District 13 1,2 ஐ  பார்த்திருக்க  வேண்டும் .இந்த  படத்தை  பற்றி  எழுதினால் கிட்ட  தட்ட  ரெண்டு  மூணு  பக்கம்  போகும் , அந்த  நடிகரை  பற்றியும்  நிறைய  சொல்லலாம் அதை பற்றி  பிறகு  சொல்லுகிறேன் .  சமீபத்தில்  கூட  ஒரு  பெண் இந்த  பர்க்கூர்  பில்டிங்க்கு பில்டிங்    அசத்திய   காட்சிகள்  இணையத்தில்  வைரலானது , பக்கமாக  வந்த   மலையில்  சைக்கிளில் வித்தை  காட்டிய  ஒருவரின்  வீடியோ அனைவரையும்  அச்சுறுத்தியது .  சரி  இந்த  படத்தை  பற்றி  பார்ப்போம்  .


ஹீரோ ஒரு கொரியர் பாய் , அவன்  வேலையே  அதுதான்  . சைக்கிளில்  முந்திக்கொண்டு  செல்லுவதில் கெட்டிக்காரர் , ஒருநாள்  எதிர்பார்த்த  விதமாக  ஒரு  பெண் இவள்  மீது  மோதுகிறாள் அங்கிருந்து  நட்பு  வளர்கிறது .  இவனுக்கு  கடன்  பிரச்சனை  வேறு  இருக்கிறது  அவன்  வேற   அடிக்கடி  வந்து  இருக்கிறத  பிடுங்கி  கொண்டு  போறதும் . வார்னிங்  கொடுத்து  போகுறதும்  வழக்கம் . முதல்ல  மோதுன  பெண்  செய்யும்  அந்த  பர்க்கூர்  பார்த்து  அதை  கற்றுக்கொள்ள  முயல்கிறான் . பிறகு அவங்க  டீம்  ல  சேர்ந்து  கொண்டு  கொள்ளை  அடிக்கிறான் . சிக்கலில்  சிக்கிகொண்ட  இவன் எப்படி  தப்பிக்கிறான்  . இறுதியில் தன்னுடைய  கடனை  அடைத்தானா  இல்லையா ?  என்பதெல்லாம்  மீதி கதை .

கொள்ளையடிக்கும்  காட்சிகளையும் , திட்டம் தீட்டும்   காட்சிகளையும்  சுவாரஸ்ய  படுத்தி  இருந்தால்  இன்னும்  விறுவிறுப்பாக  இருந்திருக்கும் .
கதை  சுவாரஸ்யம்  இல்லை  என்பது  பார்க்கும்  பொது  எனக்கும்  புரிந்தது . இருந்தாலும்  அந்த  பர்க்கூர்  காட்சிகளுக்ககவும்  தப்பிக்கும்  காட்சிகளுக்காகவும் தாரளாமாக  பார்க்கலாம்  . நெட்ப்ளிக்ஸ்   வைத்திருப்பவர்கள்  அதில்  பார்க்கலாம் . youtube ல் 25  பணம்  கட்டி  HD   தரத்தில்  பார்க்கலாம் . மேலேயே   சொல்லிவிட்டேன் இது  எல்லோருக்கும்  பிடிக்கும்  படமா  ன்னு  சொல்ல  முடியாது , நான்  பார்க்கூர்  காட்சிகளுக்காக பார்த்தேன் . பிறகு  நோட்டை  கொட்டை ன்னு  சண்டைக்கு  வந்தா  கம்பெனி  பொறுப்பாகாது. கேமரா  ஏங்கில்களில்    லாம்  அசத்தி  இருப்பார்கள் . வருங்கால  கேமரா   மேன்கள் நீங்கள்  இந்த  படத்தை  தாரளாமாக  பார்க்கலாம்  இணையத்தில்  அந்த  மேக்கிங்   பற்றி பாருங்கள்



நன்றி

#சிவஷங்கர்

Post a Comment

أحدث أقدم