SILENCED (2011)

நாகரிக  சூழல் , வளர்ச்சி  அடையாத நாட்டில்  பாலியல்  குற்றங்கள்  அதிகரித்து  கொண்டே  தான்  இருக்கின்றன . அதிலும்  ஊனமுற்றோர் , ஆதரவற்றோர் , வாய்  பேச  இயலாதோர் , காது  கேளாதோர் தான்  அதிகம்  .
55.53% இந்த  பட்டியலில்   பாதிக்கப்பட்டோர் . அதில்  23% பேர் தனக்கு  நேர்ந்ததை  வெளியில்  சொல்லாதவர்கள் .அப்படியே  கூகுளை புரட்டி  பாருங்களேன் பாலியல்  ரீதியாக நம்  நாட்டில்   இயற்ற  பட்ட  சட்டங்களை பற்றி  .




முதலில்  பாலியல்  வன்முறை  என்றால்  என்ன என்பதுதான்   பலரும் முன்வைக்கும்  கேள்வியாக  இருக்கும் . சமீபத்தில்  நான்  பார்த்த  "Flocking" என்ற  திரைப்படத்தில் பதினாறு  வயதுடைய  சிறுவன்  பதினான்கு  வயதுடைய  பெண்ணை  அவளது  அனுமதி  இல்லாமல்  கட்டாய வன்புணர்வு  செய்து  விட்டான்  என்று  வழக்கு   . ஆனால்  அந்த  ஊரில்  நல்ல  மரியாதையான குடும்பம் , அவன்  அப்படி  செய்திருக்க  மாட்டன்  . என்று  ஊரே  இந்த  சிறுமியின்  குடும்பத்திற்கு  எதிர்ப்பாக  இருக்கும் .

இவர்கள்  மேல்  வழக்கு  தொடுத்து  .  அந்த  பெண்ணை  விசாரிக்கும்  பொழுது  முதலில்  செக்ஸ்  என்றால்  என்ன ? அவன் உன்னை  என்ன  செய்தான் ? என்பதனை விளக்கமாக  சொல் . என்பார்பார்கள் . அந்த  சிறுமி   என்ன  சொல்லி  இருக்கும் . என்ன  தீர்வு  என்பதனை  அந்த  படத்தை  பார்க்கும்  பொழுது  புரிந்து  கொள்வீர்கள் . இங்கும்  அதே  தான்  முதலில்  உன்னை  கட்டாய  படுத்தினான்  என்றால் எந்தமாதிரி  கட்டாயம்  என  கேள்விகள்  எழும் .

 பாலியல்  வன்முறைகள் என்பவை. கட்டாயப்படுத்தி துன்புறுத்த படுதல்   , வன்முறைக்கு  உள்ளாக்க  பட்டோர்களின்  , அந்தரங்க  உறுப்புகளின்  மீதான துன்புறுத்தல்கள் , உத்தரவின்றி  தொடுதல் , ஆபாச  படமெடுத்தால் , ஆபாச       படம்   காண்பித்து  தொந்தரவு  செய்தல்  , காயங்களை  ஏற்படுத்துதல் போன்றவை அந்த  சட்டத்தின்  கீழ்  வருபவை  தான் . இதன்  மூலம்  அவர்களுக்கு  கடுமையான  தண்டனையும் ,ஆயுள்  தண்டனையும்  இயற்ற  முடியும் . அதுவும்  தகுந்த  ஆதாரங்களோடு  நிருபிக்க  வேண்டும் .

 இதற்கான  சிறப்பு  நீதிமன்றங்கள் மூலம்  அவர்களின்  வாக்குமூலங்களை கட்டாயாப்படுத்தாமல் எந்த  வித கடுமையான  கேள்விகளை  முன்  வைக்காமல் சேகரிக்க  சிறப்பு  நீதிமன்றங்கள் உள்ளன .  அப்படியே  வழக்கு தொடர்ந்து  ஒரு  வருடத்திற்குள்  உறுதி  படுத்த  வேண்டும் .


சரி  இந்த  சட்டங்கள்  பெண்கள் சிறுமிகளுக்கு  மட்டும்  தானா?  இல்லை . பாலியல்  வன்முறையில் கட்டாயப்படுத்தபட்ட  சிறுவர்களும் தான் .   ஏன்  ஆண்களுமே  பாதிக்க  படுகின்றன . மனச  தொட்டு  சொல்ல  சொல்லுங்க  பாப்போம் இதுவரை  நான்  பஸ்  ல்  செல்லும்  போதே  இல்லை  பள்ளி, கல்லூரியில்   படிக்கும்  போதே, உடற்பயிற்சி  இதர வேலைகளை  மேற்கொள்ளும்  போதே மற்றவர்களால்  இதுபோன்ற  பிரச்னைகளில்  உள்னளானதில்லை  என்று  . நிறையபேர்   அவரவருக்கு  நேர்ந்த  பாலியல்  கொடுமைகள்  குறித்து  யாரிடம் சொல்வதும்  இல்லை  அதுபற்றி  பேசுவதும்  இல்லை . வாய்  பேச  முடிந்தவர்களே  வெளியில்  சொல்வதில்ல்லை.

தென்கொரிய  நாட்டில்  நடந்த  உண்மை  சம்பவங்களை  தொகுத்து  எழுதப்பட்ட  நாவலின் அடிப்படையில்  வெளிவந்த  திரைப்படம்  தான்  இந்த  "Silenced " . முதல்  அரை  மணி  நேரத்திலேயே  திரைப்படம்  எது  பற்றி  பேச  போகிறது  என்பதனை  உணர  முடியும் . தன்னுடைய குழந்தையின்  நோயை  குணப்படுத்துவதர்க்காக கொரியத்  தலைநகரான சியோலில்  இருந்து நகரத்தை அடுத்துள்ள  Ja Ae Acadamy  க்கு   Professor ஒருவரின்  பரிந்துரையில் , ஓவிய  ஆசிரியர்  பணிக்கு  செல்கிறார், அந்த  பள்ளியில் காது கேளாத  வாய்  பேச  முடியாத  , ஆதவற்றோர்கள் தான் விடுதியில்  தங்கி  படிக்கின்றனர் .  அங்கு  சென்ற  நாள்களில்  இருந்து நடப்பதை  கவனிக்கும்  போது  எதோ  பிரச்னை  இருப்பதை  கண்டறிகிறார் . அந்த  பள்ளி ஆசரியர்கள்  மூலம்  பாதிக்கபட்ட சிலரை  காப்பாற்றி அவர்களின்  மீது  வழக்கு  தொடுகிறார் . அது  என்ன  வழக்கு ? பாதிக்க பட்டோர்  யார் ? இறுதியில்  என்ன  ஆனது  என்பதனை பார்த்து  தெரிந்துகொள்ளுங்கள் .



 பாதிக்கப்பட்ட  சிறுவர்  சிறுமிகளின் முக  அசைவுகள் "Korean Sign Language"  மூலம்  அவர்களின்  காதப்பாத்திரத்தை  ஒரு  வரியில்  விவரித்து  பேசிட  முடியாது . "TRAIN TO BUSAN" படத்தில்  நடித்த  ஹீரோ அவருடைய  நடிப்பு  இந்த  படத்திலும்  இயல்பாகவே  இருந்தது .   படத்தை பற்றி  எதையும்  சொல்ல  குடாது  என்று  தான்  இருந்தேன் , கட்டயாம்  பார்த்தே  ஆக  வேண்டிய  திரைப்படம்  என்பதால்  படத்தை  ஏன்  பார்க்க  வேண்டும்  என்பதற்காக  சொல்லி  விட்டேன்  . பார்த்த  பிறகு  வாருங்கள்  படத்தை  பற்றி  விவாதிப்போம் . மனதை  உருக்கிய  நாவல்  படித்த   அனுபவம் , கண்டிப்பாக  ஒரு  கர்சீப்  கையில்  வைத்துகொண்டு  பாருங்கள் . கண்ணீர்  உறுதி , அதைதான் நம்மால் மற்றவருக்காக தரமுடிகிறது  என்பது  கசப்பான  உண்மையும் .

நன்றி

#சிவஷங்கர் 

Post a Comment

Previous Post Next Post