My Magic (2008) வித்தைக்காரனின் மகன்

தந்தைக்கும்  மகனுக்கும்  உள்ள  அன்பையும்,  பாசத்தயும்  வெளிபடுத்தும். ஒரு  சில  படங்களை  பார்த்திருக்கிறேன் . இது  என்னை  கொஞ்சம்  யோசிக்க  வைத்துவிட்டது.இந்த  படத்திற்கு  கதை  சொல்வதில்  விருப்பம்  இல்லை  இருந்தாலும்  ஒரு  சிறு  தகவலை  தந்துவிடுகிறேன் , கேட்டுவிட்டு  இது  மாறி  எத்தன  படம்  பார்த்திருப்பேன் , இது லாம்  ஒர்த்   ஹா  என்ற  கேள்விகளை  எழுப்ப  வேண்டாம் . படத்தை  பாருங்க நிச்சயம்  இது  கொஞ்சம்  மாற்று  திரைப்படம்  தான் .






 . குடிகார  தந்தை  தினமும்  குடிக்காமல்  வீட்டுக்கு  வருவதில்லை , இவனுடைய  மனைவி  இவரோடு  இல்லை . இவருடைய  மகன்  தினமும்  அம்மாவிற்காக  காத்திருக்கிறான் , அம்மா  எப்ப  பா வருவாங்க  அம்மா  எப்ப  பா  வருவாங்கன்னு  கேட்டுகிட்டே இருக்கான்  . ஒரு  சிங்கபூர்  கிளப் ல் வேலை  பார்க்கும்  இவர் . தினமும்  அங்குள்ளவர்களுக்கு  எதோ  ஒரு  வித்தை   காட்ட்டி  விட்டு  செல்கிறார் . பிறகு  அங்கு  பெரிய  பாஸுக்கு   வித்தைகாட்டுகிறார் , அதில்  வரும்  பணத்தை  தன்   மகனிடம்  கொடுக்கிறார் .  .ஒருநாள்  வெகுசித்தரவதைக்கு க்கு  ஆளாகிறான் , என்ன  செய்கிறான் ? தன்னுடைய  மனைவி   என்ன  ஆனா? தன்னுடைய  மகனின்  விருப்பத்தை  நிறைவேற்றினானா ? என்பதெல்லாம்  படத்தை  பார்த்து  தெரிந்துகொள்ளுங்கள் .


மிக  சிம்பிள்  ஆன  கதைதான் , இந்த  படத்தை  பற்றிய  மேலும்  சிறப்பான  தகவல்கள்  என்னவென்றால் , சிங்கப்பூர்  நாட்டில் வெளிவந்த  தமிழ்  திரைப்படம் , முதல்  முதலில்  இந்த  நாட்டில்  இருந்து  கேன்நீஸ் திரைப்பட  விழாவிற்கு  சென்ற  திரைப்படம் . ஆஸ்கார்  விருதுக்கு  பரிந்துரைக்கு  அனுப்பி  வைக்க  பட்ட  திரைப்படம் . மேலும்  திரைப்பட  விழாக்களிலும் , கலந்து  கொண்டு  விருதுகளையும்  வென்ற  திரைப்படம் . 

 இயக்குனர்  சீன  நாட்டை  சேர்ந்தவர் . அவருடைய  திரைப்படங்கள்  ஒவ்வொன்றும்  ஏதாவது  ஒரு  திரைப்பட  விழாவை  தொட்டுவிடுவது  வழக்கம் போல. எனக்கு  இணையத்தில்  தேடியதில்  நிறைய  தகவல்கள்  கிடைத்தன . அவருடைய  மற்ற  படங்களையும்  பார்க்க  தரவிறக்கி  வைக்கிறேன் .

நடிகராக  நடித்திருக்கும்  அவர்  ஒரு  மெஜிசியன்  என்பதால்  அசத்தி  இருக்கிறார் . சிறுவன்  இயல்பான  நடிப்பில்  கவருகிறான் . சிறந்த  நடிகருக்கான  விருதை  வென்ற இப்படத்தை  நேரம்  அமையும்  பொழுது  தவறாமல்  பார்க்கவும்  எந்த  விதத்திலும்  நேரம்  வீணடிக்க  படாது . இல்லை  எனக்கு  கதை  ஈர்க்கவில்லை  என்றாலும்  அதில்  வரக்கூடிய  மேஜிக்  காட்சிகளுக்காக  கண்டிப்பாக  பார்க்கலாம்  .

நன்றி 

#சிவஷங்கர்

Post a Comment

أحدث أقدم