எல்லா கதைகளிலும் கட்டம் கட்டி அடிக்கும் கொரியத் திரைப்படங்களில் ,
சமீபத்தில் அட்டகாசமான ஒரு திரைப்படத்தை பார்க்க நேர்ந்தது . கொள்ளையடிக்க கொள்ளையன் எப்படி திட்டம் போடுகிறானோ , அதே அளவு அவனை பிடிக்க போகும் அதிகாரியும் பக்கவாக ஒரு திட்டத்தை போட்டு செயல்படுத்துவார் , அதுதான் இங்க மெயின் கான்செப்ட் அப்படி ஒரு முரட்டுத்தனமான கொள்ளையனை பிடிக்க இவர்கள் மேற்கொள்வதே மீதி திரைப்படம் .
ஒரு படத்தின் முதல் ஆரம்ப தொடக்கத்தை வைத்தே நம்மை கவர்ந்து விடுவார்கள் கொரிய இயக்குனர்கள் . இது ரீமேக் படம் என்று கேள்விபட்டேன் , அதை பார்த்தவர்கள் படத்தை பற்றி சொல்லுங்கள் . , முழு படத்தயும் உக்காந்த இடத்தை விட்டு எழாமல் என்னை முழுவதுமாக காணவைத்தது இந்த கட்டம் கட்டி அடிக்கும் ஆட்டம் , ஒரு சில இடங்களில் கொஞ்சம் மெதுவாக நகர்கிறது , ஆனாலும் ஏதாவது ஒரு வேகத்தை கூட்டிக்கொண்டு போவதாக தெரிகிறது
இந்த திரைப்படத்திற்கு கதை சொல்ல துளியும் ஆர்வம் இல்லை. கதை தெரிந்துகொண்டு பார்க்க விரும்புபவர்கள் இணையத்தை நாடிக்கொள்ளவும் . வங்கி கொள்ளை அடிக்கும் திரைப்படங்களை ரசிப்பவர்களும் , த்ரில்லர் ஆக்சன் விரும்பிகளும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் . ஆஹா ஓஓஹோ அட்டகாசம் என்று சொல்ல வில்லை என்றாலும் தாராளமாக ஒருமுறை பார்க்கலாம் .
நன்றி
#சிவஷங்கர்
إرسال تعليق