The Good, the Bad, the Weird புதையலை தேடி

படத்தோட  தலைப்பிற்கு  தகுந்த  மாதிரியே மூணு  கதாபாத்திரம் ,  1966 ல  வந்த  ஒரு  படத்தோட  கொரியத்  தழுவல்  தான்  இது , சமீபத்தில்   என்னை   மிரட்டிய  I SAW THE DEVIL  இயக்குனரின்   மற்றொமொரு  அட்டகாசமான  வெஸ்ட்ரன்  படம்  இது , இதற்க்கு முன்  வெஸ்ட்ரன்  படங்களை   பார்த்த  மாதிரியே  ஏதும்  நினைவில்  இல்லை , தமிழில்  ஒரு வெஸ்ட்ரன் கான்செப்ட் ல  அரவேக்காட்டு  படம்  பார்த்த  நினைவு  வந்தது   .


அதுல  கூட  ஒரு  நல்லவன்  கெட்டவன்   கான்செப்ட்  அனேகம்மா   இங்கிருந்து  உருவினதா  கூட  இருக்கலாம் , சோ  எனக்கு  வெஸ்ட்ரன் படங்களை  பார்க்காததால்   எனக்கு  அந்த  படங்களின்  மேல்  ஈர்ப்பு  வரதில்லை  கிட்டத்தட்ட  கிடப்பில்  போடப்பட்ட  படத்தை  ஒருவழியா  பார்த்து  முடித்துவிட்டேன் . நேரத்தை  வீணடிக்காத    விறுவிறுப்பான    ஆக்சன்  அதே  நேரத்துல  காமெடி  கலந்த  ஒரு  தேடல்  தான்  கதை .








இதில்  வில்லனாக  நடித்திருப்பவர்  ,   I SAW THE DEVIL  ல்  படு  பக்கவா  நடித்தவர் , இவரோட  மற்ற  படங்களை பார்க்க  வேண்டும்  ன்னு  நினச்சேன்   . இதுல  அவர்  பண்ணிருக்கும்  கேரக்ட்டர்  செம்ம  சூப்பர் . கெட்டப்   ல  இருந்து  ஹேர்  ஸ்டைல்  வரைக்கும்  அசத்தி  இருக்கிறார் , அதே  போல  மெம்மரீஸ்  ஆப்   மர்டர்  படத்தில்  நடித்த . லோக்கல்  போலீஸ்  இதுல  செம்மையான  ஒரு  ரோல்  செய்து  இருக்கார்  முரட்டு  காமெடியன்  .

பாதிக்கு  மேல் அவர்  செய்கிற  சேட்டையில்   தான்  நகருகிறது , ஆரம்பத்துல  அவர்  வந்ததுல  இருந்து  முடியுற  வரை  சிரிப்புக்கும்  உத்தரவாதம் , மூணு  பேருல  இவர்  பெர்பெக்ட்  சூட் .  இன்னொருவரும்  நான்  பார்த்த  ஒரு  சில  கொரிய   படங்களில்  அவரை  பார்த்திருக்கிறேன் , மூன்று  முன்னணி  நடிகர்களை  வைத்து  அசத்த்தோ  அசத்து ன்னு  பட்டய  கிளப்பி  இருக்கிறார்  இயக்குனர் . 

பல  புராண  கதையெல்லாம்  சொல்ல  மாட்டேங்கேங்க  அதெல்லாம்  நீங்களே  பார்த்து  தெரிஞ்சுக்கொள்ளுங்கோ .  சிம்பிள்  ஹா  இன்னா  நா இன்னா  ன்னு  சொல்லுடுறேன் . படத்தோட  கதை  என்னன்னேன்னா  ரயில்  ல  திருட  போகுற  நம்ப  காமெடியனுக்கு  ஒரு  பபுதையளோட வரைபடம்  கிடைக்கிறது  ,  அதெப்படி  கிடைக்கிதுன்னு  பாருங்க  . ஆனா  இந்த  புதையல்  மேப்  க்காக  இரண்டு  பேரு  பிளான்  போட்டு  வந்திருப்பாங்க . அதுக்குள்ள  தலைவர்  கைக்கு  கிடக்க  அவர்  அத  எடுத்துகொண்டு  கிளம்பிடுறார் , அந்த  ஒரு  மேப்  காக  லோக்கல்  திருடர்ஸ்ஸ் , அப்புறம்  ஊருல  பெரிய  தலைக்கட்டுஸ்  அவன்  இவன்  ன்னு  கிளம்ப  ஆரம்பிக்கிறான்  , இறுதியில் அது  யாருக்கு  கிடைத்தது ? முதல்ல  திருடுன  நம்ப  காமெடியன்  என்ன  பண்ணார்  ?  என  அட்டகாசமாக  சிறப்பான  சிரிப்புடன்  சொல்லி  இருப்பாங்க , டோன்ட்  மிஸ்  இட் வொர்த்  பார்  வாட்சிங் .
 

பார்த்தே  ஆக  வேண்டிய  திரைப்படமா  என்ற  கேள்விக்கு  , பார்த்தல் நேரம்  வீணடிக்க  படாது  என்ற  பதிலை  இந்த  படத்திற்கு  சொல்லிக்கொள்ள  விரும்புகிறேன் .  யாரும்  எதிர்பார்க்க முடியாத  அளவுக்கு  இருக்கும்மா  ?  இருக்கலாம் , பிளாஷ்  பேக்  ட்விஸ்ட்  லாம்  சொல்லி  இருக்கங்க  , எத்தனையோ  உருப்படி  இல்லா  படங்கள்  பார்க்கும்  மத்தியில்  இந்த  படத்தை  தாரளாமாக  பார்த்து  ரசிக்கலாம்  . பார்த்தவர்கள்  தங்கள்  கருத்துக்களை  சொல்லுங்கள்  .  எனக்கு  பார்க்க  வேண்டிய  நல்ல  வெஸ்ட்ரன்  படங்களை  பரிந்துரையுங்கள்  . நான்  இதோட  ஒரிஜினல்  வெர்சன் யும்  கூடிய  விரைவில்  பார்க்கிறேன்  . 

நன்றி 

#சிவஷங்கர்  

Post a Comment

أحدث أقدم