முன்னோட்டம் வந்த பிறகே ஒவ்வொருவருக்கும் மனதில் பலவிதமான எதிர்பார்ப்புக்களை உண்டாக்கிவிடும் , மற்ற ஜானர் திரைப்படங்கள் தரும் அனுபவுமும், ரசனையையும் விட எனக்கு ஸ்போர்ட்ஸ் திரைப்படங்கள் தரும் அலாதியான இன்பம் வேறு . அது கதையாகட்டும் அல்லது ஒரு உண்மை நிகழ்வை இன்ஸ்பயர் செய்த படமாகட்டும். ஒவ்வொரு காட்சியிலும் உடம்பு சிலிர்க்க்கும் , கைகள் துரு துரு ன்னு ஒரே பரப்பப்பா இருக்கும் நானே அந்த கதைல இறங்கி விளையாடுற மாதிரி ஒரு அனுபத்தை தரும் . சில சமயங்களில் கண்களில் ஆனந்த கண்ணீர் ம் வந்துவிடும் வந்தும் இருக்கிறது. உண்மை கதையை தழுவி எடுக்க கூடிய திரைப்படங்களை என்னவெல்லாம் செய்ய போகிறார்களோ அல்லது இதுதான் உண்மையா , நம்பி விடலாமா ? என கேள்விக்கு மேல் கேள்விகள் மனதில் எழும் . சாதரணமாக எல்லோருக்கும் பிடிக்கின்ற ஒரு படம் மற்றவருக்கு பிடிக்காமல் போக பல காரணங்கள் இருக்கலாம் . ஆனா இதுவரை நான் பார்த்த எந்த ஸ்போர்ட்ஸ் திரைப்படங்களும் என்னை ஏமாற்றியது இல்லை . தமிழில் எப்பவாது அல்லது வருசத்துக்கு ஒன்னு வரதே அரிதான செயல் . இந்த முறை வருட தொடக்கத்திலே இறுதி சுற்று வந்து அசத்தியது . இந்தியிலும் .
இந்த வருடம் ஹிந்தி படங்கள் நிறையே என்னை கவர்ந்து இழுத்து இருக்கின்றன . இருந்தாலும் இந்த பையோ கிராபி திரைப்படங்களும் ஸ்போர்ட்ஸ் திரைப்படங்களும் தான் முதல் ஐந்து இடத்தை பிடித்து உள்ளன . வருசத்துக்கு ஒன்று இரண்டு ஸ்போர்ட்ஸ் திரைப்படங்கள் தான் வரும் ஆனா இந்த வருடம் தான் 5 படங்கள் பக்கமாக வந்துள்ளது . ஸ்போர்ட்ஸ் திரைபடத்திற்கு என்றே இருக்கும் ஒரு வரைமுறை இரண்டாம் பாதியில் வரக்கூடியவை எல்லாம் நம்மால் எளிதில் யூகிக்க கூடிய வண்ணம் இருக்கும் . இதுதான் நடக்க போகிறது எப்படியும் . என்ற மனநிலை பார்க்கும் போதே நமக்குள் கிரியேட் செய்து விடும்.
அதே முதல் பாதியில் உடம்பு சிலர்க்கும் அளவுக்கு பார்க்கும் நம்மை வியப்பில் ஆழ்த்தி விடும் . சமீபத்தில் பார்த்த தங்கல் திரைப்படம் அந்த இன்பத்தை எனக்கு தந்தது .
இந்த வருட என்னுடைய டாப் இந்தி திரைப்படங்கள்
1.Dangal
வருட இறுதியில் வந்து எல்லோருடைய மனதிலும் முதல் இடத்தில் நிற்பது இந்த படம்தான் . "தன்னுடைய ஆசையை தன் மகள் மூலம் நிறைவேற்ற முடிந்ததா " என்பதே கதை . அமீர் கான் தேர்ந்தெடுக்கும் கதைகளம் பற்றி சொல்லவா வேண்டும் . பொதுவாக உண்மை கதையை படமாக்குவது அவ்வளவு சுலபம் இல்லை . அதுவும் ஸ்போர்ட்ஸ் வகையில் ஒருவருடைய கதையில் . முக்கிய துவம் வாய்ந்த பெண் கதாபத்திரம் மிரட்டி இருப்பாங்க . இந்திய சினிமாவில் இன்னும் வருடங்கள் பேச கூடிய படமாக இருக்கும் . தவறவே விடகூடாத ஒரு திரைப்படம் .
2.M.S. Dhoni: The Untold Story
கிரிகெட் வீரர் , சொல்லபடாத கதையாக வந்திருந்த திரைப்படம் . தோனிக்கு ரசிகர் பட்டாளம் அதிகம் . வருவதற்கு முன்பே மக்கள் மத்தியில் பல எதிர்பார்ப்பு . ரஜினி , அஜித் படங்களுக்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்குமோ அதே அளவு தமிழ்நாட்டில் தோணி படத்திற்கு வரவேற்ப்பு அமைந்தது . 200 கோடிக்கு மேல் வசூலில் வெற்றி அடைந்தது மக்கள் மத்தியிலும் அப்படித்தான் இருந்தாலும் மற்ற கிரிகெட் வீரர் ரசிகர்கள் எதிர் கருத்துக்களை சொல்லிய வண்ணம் படியே இருந்தார்கள் . இந்த படமும் பார்த்திருக்க வேண்டிய திரைப்படம் .
3.சுல்தான்
உடலுக்ககாகவே செதுக்கப்பட்ட ஒரு கதை . ஷாட் பை ஷாட் நம்மை அதிர வைக்கும் , அதிர வைக்கும் என்றால் அந்த அதிர்வு இல்லை . மண்ணோட மகன் ன்னு ஆரம்பிக்கிற கதை ல இருந்து இறுதி வரை ஒரு விதமான பரபரப்பான எதிர்பார்ப்போடையே கிளம்பும் . பார்த்தவங்களுக்கு புரியும் . என்னை அறியாமாலே பல காட்சிகளுக்கு கை தட்டலோடு கத்தி கொண்டு இருந்தேன் . கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் .
4.Budhia Singh: Born to Run
எத்தனை பேர் இந்த திரைப்படம் பார்தீகன்னு தெரியாது . எப்ப வந்தது போனது ன்னு தெரியல்ல . தலைபிற்கு தகுந்த கதை தான் உங்கள் எதிர்பார்ப்பை நான் சொல்லி வீணடிக்க விரும்ப வில்லை பார்த்துவிட்டு வாருங்கள் படத்தை பற்றி நிறைய பேசுவோம் .
5. இதுல நான் பல படங்களை பரிந்துரைக்க விரும்புகிறேன் . ஏனென்றால் இவையும் என்னை ஈர்த்த படங்களே 10 படங்களுக்கு மேல் என்னை வெகுவாக கவர்ந்து விட்டது . ஏர்லிஃப்ட்,உட்தா பஞ்சாப்,ஃபேன்,ராமன் ராகவ் 2.0,ஃபோபியா,பிங்க்,கஹானி 2,அலிகர்,சரப்ஜித்,நீர்ஜா,அகிரா ,
என சொல்லிக்கொண்டே போகலாம் . நண்பர்களே இந்த படங்களை எப்படியாவது பார்த்துவிடுங்கள் நன்றி.
சிவஷங்கர்
إرسال تعليق