Trash (2014) தப்பிக்க போராடும் சிறுவர்கள்

சிறுவர்களை  வைத்து  எப்படி  படம்  எடுக்க  வேண்டும்  சொல்லி  தரும்  TRASH

இப்படி  கதைக்குள்  கதையை கொண்ட கதை அமைப்பும் ,  அதில்  மறைந்து  இருக்கும்   ட்விஸ்ட்க்களும்    அதை  அவிழ்விக்க போடும்  திட்டங்களும் .  அதனால்  வரும்  சிக்கல்களோடு தப்பிக்க  போராட   போரட்டத்தை பல  திருப்புமுனைகளோடு    விறுவிறுப்பாக கொஞ்சம்  கூட  தொய்வில்லாமல்    படம்  முழுவதும்  சுவாரசியமான  நிகழ்வுகளாகவே  இருந்தா  எப்படி  இருக்கும்  . அப்படி  ஒரு  அட்டகாசமான  திரைப்படம்  தான் Trash. இறுதி  வரை  பின்னணி   இசையும் SOUNDTRACK ம் வேற  லெவல் . கண்  இமைக்காமல்  பார்க்க  கூடிய  படம் .







இப்படி  ஒரு  கதைகளத்தில்  அசத்தி  இருப்பவர்கள்  மூன்று  சிறுவர்கள் ஆம் 
பதினான்கு  வயதுடைய  மூன்று  சிறுவர்கள்  தான்  படத்தின்  நாயகர்கள் பிரம்மிக்க  வைத்துவிட்டார்கள், ஷாட்  பை   ஷாட் . படத்தை  பார்த்து  முடித்த  பிறகு  மூவரை  பற்றி  இணையத்தில்  தேடினால்  இவர்களுக்கு  இதுதான்  முதல்  படமாம் . நம்பவே  முடியவில்லை  . நடிப்பில்  எல்லாரையும்  தூக்கி  சாப்ற்றுவாங்க போல . இவர்களுக்கு  உதவியாக  நடித்திருக்கும்  சர்ச்  பாதரும் , அவருடைய  மகளும் சிறுது  நேரம் அப்ப அப்ப  வந்தாலும்  அசத்தல்  படத்தை  நிச்சயமாக  பாரத்தே  தீர  வேண்டும்  . படத்தை  பற்றி  சொல்கிறேன் .  

குப்பை  மேட்டில்  வாழ்பவர்கள் , மற்ற  மனிதர்களை  போல  சராசரி  வாழ்க்கை  வாழ  முடியாத  இவர்கள் தினமும்  அங்கு  வந்து  கொட்டும்  குப்பைகளின்  மூலம் கிடைக்கும்  பொருள்களை   வைத்து   வருமானத்தை  ஈட்டி  வாழ்கையை  நடத்துபவர்கள் . கிட்ட  தட்ட  உறவினர்கள்  என்று  சொல்லிக்கொள்ள  யாருமில்லாதவர்கள் தான்  அதிகம்  . அப்படி  மூன்று  சிறுவர்களில்  ஒருவனான ஒருத்தனுக்கு  ஒரு  பர்ஸ்  கிடைக்கிறது  . அதில்  பணமும்  இருக்கிறது  . அதை  எடுத்தவுடன்  தன்   நண்பனுக்கு  தெரியபடுத்துகிறான் . பிறகு  ஒரு  பெரிய  பிரச்சனை  வருகிறது .

அந்த  பர்ஸை   கண்டுபிடிக்க  போலீஸ்   அந்த  இடைத்தை  நெருங்குகிறது .   அதிலிருந்து  ஓட்டம்  தொடருகிறது , ஜம்பிங்   ரேசிங் பிளானிங்  ட்விஸ்ட்ங் த்ரில்லிங்ன்னு   விறுவிறுப்பு  குறையாமல்   இறுதி  வரை  அதே  மின்னல்  வேகத்தோடு  தான்  கதையும்  திரைக்கதையும்  பயணிக்கிறது   ..   என்ன  ஆனது ?  தப்பித்தார்களா இல்லையா ?  அந்த  பர்ஸ்  யாருடையது ?  அதனால  வந்த  பிரச்சனை  என்ன  ?  எல்லா  கேள்விக்கும்  பதில்கள்  படத்தில்  சொல்லி  இருப்பார்கள்  பார்த்து  தெரிந்துகொள்ளுங்கள் .

சமீபத்தில்  திருச்சி  சென்ற  பொழுது  ஒரு  லோக்கல்  தொலைகாட்சியில்  பைசா  என்ற  தமிழ்படத்தை  பார்க்க  நேர்ந்தது . இதே  கான்செப்ட்  தான்  ஹீரோ  குப்பை  பொறுக்குபவர்  அவருக்கு  ஒரு  பேக்   கையில்  கிடைகிறது , அதனால்  ஒரு  பிரச்சனை  அவரை  துரத்த  அதிலிருந்து  தப்பித்தாரா  ?  இல்லையா  என்பதுதான் . நன்றாக  வந்திருக்க  வேண்டிய  படம்  படத்தின்  முன்னோட்டம்  மட்டுமே  எனக்கு  பிடித்தது  . TRASH ன்  கதைக்களம் கதையமைக்க  பட்டிருக்கும்  விதம்  வேறு . இந்த  கான்செப்ட்  ஐ  கொண்டு  எப்படி  வேண்டுமாலும்  கதை  அமைக்கலாம்  . எனக்கு  Trash   மறக்க  முடியாத  ஒரு  திரைப்படமாக  அமைந்திருகிறது . மீண்டும்  மீண்டும்  பார்க்க  தோன்றுகிறது . 


நாவலை  மையபடுத்தி  எடுக்கப்பட்ட  இந்த  திரைப்படம்  திரைப்படவிழாகளில்  திரையிடப்பட்டு  பல  விருதுகளை  வென்றும்  பரிந்துரைக்க  பட்டும்  இருக்கிறது  . என்னுடைய  நண்பர்கள்  அனைவரும்  இந்த  படத்தை  பார்க்க  வேண்டும் . நல்ல  படங்களை  தவற  விட  வேண்டாம் இதுபோல  படங்கள்  தமிழில்  வரவேண்டும்  தமிழ்  ரசிகர்களையும்  கவர  வேண்டும்  என்பது  என்னுடைய  ஆசை .  வருங்கால  இயக்குனர்களே  நிறைவேற்றுங்கள் . இந்த  திரைப்படம்  என்னுடைய  நண்பர்  ஒருவர்  எனக்கு  கொடுத்தார்  அதில்  நான்  பார்த்தேன். நீங்க  எங்கயாவது  தேடி  எப்படியாவது  பார்த்துவிடுங்கள் .

நன்றி 

#சிவஷங்கர்.

Post a Comment

أحدث أقدم