சிறுவர்களை வைத்து எப்படி படம் எடுக்க வேண்டும் சொல்லி தரும் TRASH
இப்படி ஒரு கதைகளத்தில் அசத்தி இருப்பவர்கள் மூன்று சிறுவர்கள் ஆம்
பதினான்கு வயதுடைய மூன்று சிறுவர்கள் தான் படத்தின் நாயகர்கள் பிரம்மிக்க வைத்துவிட்டார்கள், ஷாட் பை ஷாட் . படத்தை பார்த்து முடித்த பிறகு மூவரை பற்றி இணையத்தில் தேடினால் இவர்களுக்கு இதுதான் முதல் படமாம் . நம்பவே முடியவில்லை . நடிப்பில் எல்லாரையும் தூக்கி சாப்ற்றுவாங்க போல . இவர்களுக்கு உதவியாக நடித்திருக்கும் சர்ச் பாதரும் , அவருடைய மகளும் சிறுது நேரம் அப்ப அப்ப வந்தாலும் அசத்தல் படத்தை நிச்சயமாக பாரத்தே தீர வேண்டும் . படத்தை பற்றி சொல்கிறேன் .
குப்பை மேட்டில் வாழ்பவர்கள் , மற்ற மனிதர்களை போல சராசரி வாழ்க்கை வாழ முடியாத இவர்கள் தினமும் அங்கு வந்து கொட்டும் குப்பைகளின் மூலம் கிடைக்கும் பொருள்களை வைத்து வருமானத்தை ஈட்டி வாழ்கையை நடத்துபவர்கள் . கிட்ட தட்ட உறவினர்கள் என்று சொல்லிக்கொள்ள யாருமில்லாதவர்கள் தான் அதிகம் . அப்படி மூன்று சிறுவர்களில் ஒருவனான ஒருத்தனுக்கு ஒரு பர்ஸ் கிடைக்கிறது . அதில் பணமும் இருக்கிறது . அதை எடுத்தவுடன் தன் நண்பனுக்கு தெரியபடுத்துகிறான் . பிறகு ஒரு பெரிய பிரச்சனை வருகிறது .
அந்த பர்ஸை கண்டுபிடிக்க போலீஸ் அந்த இடைத்தை நெருங்குகிறது . அதிலிருந்து ஓட்டம் தொடருகிறது , ஜம்பிங் ரேசிங் பிளானிங் ட்விஸ்ட்ங் த்ரில்லிங்ன்னு விறுவிறுப்பு குறையாமல் இறுதி வரை அதே மின்னல் வேகத்தோடு தான் கதையும் திரைக்கதையும் பயணிக்கிறது .. என்ன ஆனது ? தப்பித்தார்களா இல்லையா ? அந்த பர்ஸ் யாருடையது ? அதனால வந்த பிரச்சனை என்ன ? எல்லா கேள்விக்கும் பதில்கள் படத்தில் சொல்லி இருப்பார்கள் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் .
சமீபத்தில் திருச்சி சென்ற பொழுது ஒரு லோக்கல் தொலைகாட்சியில் பைசா என்ற தமிழ்படத்தை பார்க்க நேர்ந்தது . இதே கான்செப்ட் தான் ஹீரோ குப்பை பொறுக்குபவர் அவருக்கு ஒரு பேக் கையில் கிடைகிறது , அதனால் ஒரு பிரச்சனை அவரை துரத்த அதிலிருந்து தப்பித்தாரா ? இல்லையா என்பதுதான் . நன்றாக வந்திருக்க வேண்டிய படம் படத்தின் முன்னோட்டம் மட்டுமே எனக்கு பிடித்தது . TRASH ன் கதைக்களம் கதையமைக்க பட்டிருக்கும் விதம் வேறு . இந்த கான்செப்ட் ஐ கொண்டு எப்படி வேண்டுமாலும் கதை அமைக்கலாம் . எனக்கு Trash மறக்க முடியாத ஒரு திரைப்படமாக அமைந்திருகிறது . மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகிறது .
நாவலை மையபடுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் திரைப்படவிழாகளில் திரையிடப்பட்டு பல விருதுகளை வென்றும் பரிந்துரைக்க பட்டும் இருக்கிறது . என்னுடைய நண்பர்கள் அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும் . நல்ல படங்களை தவற விட வேண்டாம் இதுபோல படங்கள் தமிழில் வரவேண்டும் தமிழ் ரசிகர்களையும் கவர வேண்டும் என்பது என்னுடைய ஆசை . வருங்கால இயக்குனர்களே நிறைவேற்றுங்கள் . இந்த திரைப்படம் என்னுடைய நண்பர் ஒருவர் எனக்கு கொடுத்தார் அதில் நான் பார்த்தேன். நீங்க எங்கயாவது தேடி எப்படியாவது பார்த்துவிடுங்கள் .
நன்றி
#சிவஷங்கர்.
Post a Comment