தந்தைக்கும் மகனுக்கும் உள்ள அன்பையும், பாசத்தயும் வெளிபடுத்தும். ஒரு சில படங்களை பார்த்திருக்கிறேன் . இது என்னை கொஞ்சம் யோசிக்க வைத்துவிட்டது.இந்த படத்திற்கு கதை சொல்வதில் விருப்பம் இல்லை இருந்தாலும் ஒரு சிறு தகவலை தந்துவிடுகிறேன் , கேட்டுவிட்டு இது மாறி எத்தன படம் பார்த்திருப்பேன் , இது லாம் ஒர்த் ஹா என்ற கேள்விகளை எழுப்ப வேண்டாம் . படத்தை பாருங்க நிச்சயம் இது கொஞ்சம் மாற்று திரைப்படம் தான் .
. குடிகார தந்தை தினமும் குடிக்காமல் வீட்டுக்கு வருவதில்லை , இவனுடைய மனைவி இவரோடு இல்லை . இவருடைய மகன் தினமும் அம்மாவிற்காக காத்திருக்கிறான் , அம்மா எப்ப பா வருவாங்க அம்மா எப்ப பா வருவாங்கன்னு கேட்டுகிட்டே இருக்கான் . ஒரு சிங்கபூர் கிளப் ல் வேலை பார்க்கும் இவர் . தினமும் அங்குள்ளவர்களுக்கு எதோ ஒரு வித்தை காட்ட்டி விட்டு செல்கிறார் . பிறகு அங்கு பெரிய பாஸுக்கு வித்தைகாட்டுகிறார் , அதில் வரும் பணத்தை தன் மகனிடம் கொடுக்கிறார் . .ஒருநாள் வெகுசித்தரவதைக்கு க்கு ஆளாகிறான் , என்ன செய்கிறான் ? தன்னுடைய மனைவி என்ன ஆனா? தன்னுடைய மகனின் விருப்பத்தை நிறைவேற்றினானா ? என்பதெல்லாம் படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் .
மிக சிம்பிள் ஆன கதைதான் , இந்த படத்தை பற்றிய மேலும் சிறப்பான தகவல்கள் என்னவென்றால் , சிங்கப்பூர் நாட்டில் வெளிவந்த தமிழ் திரைப்படம் , முதல் முதலில் இந்த நாட்டில் இருந்து கேன்நீஸ் திரைப்பட விழாவிற்கு சென்ற திரைப்படம் . ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கு அனுப்பி வைக்க பட்ட திரைப்படம் . மேலும் திரைப்பட விழாக்களிலும் , கலந்து கொண்டு விருதுகளையும் வென்ற திரைப்படம் .
இயக்குனர் சீன நாட்டை சேர்ந்தவர் . அவருடைய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு திரைப்பட விழாவை தொட்டுவிடுவது வழக்கம் போல. எனக்கு இணையத்தில் தேடியதில் நிறைய தகவல்கள் கிடைத்தன . அவருடைய மற்ற படங்களையும் பார்க்க தரவிறக்கி வைக்கிறேன் .
நடிகராக நடித்திருக்கும் அவர் ஒரு மெஜிசியன் என்பதால் அசத்தி இருக்கிறார் . சிறுவன் இயல்பான நடிப்பில் கவருகிறான் . சிறந்த நடிகருக்கான விருதை வென்ற இப்படத்தை நேரம் அமையும் பொழுது தவறாமல் பார்க்கவும் எந்த விதத்திலும் நேரம் வீணடிக்க படாது . இல்லை எனக்கு கதை ஈர்க்கவில்லை என்றாலும் அதில் வரக்கூடிய மேஜிக் காட்சிகளுக்காக கண்டிப்பாக பார்க்கலாம் .
நன்றி
#சிவஷங்கர்
Post a Comment