Where to Invade Next (2015) எட்டு நாடுகளில் பயணம்

தொடர்ந்து  டாக்குமெண்டரி  படங்களாகவே  இயக்கி  வரும் அட்டகாசமான  மனிதரின்  மற்றுமொரு  நல்ல  திரைப்படம்  தான்  Where to invade next. 2015 ஆம்  ஆண்டு  வெளிவந்த  இந்த  டாக்குமெண்டரி யை  Michael Moore இயக்கி  நடித்திருக்கிறார், நிறைய  திரைப்பட  விழாக்களிலும்  மேலும்  விருதுகளையும்  வென்று  இருக்கிறது .

 





 பல ஆவண  திரைப்படங்கள் மூலம்   மக்கள்  மத்தியில்  நிறைய  பேச  பட்டு  இருக்கிறார்  .  உயரிய   விருதுகளை  வென்ற  இவருடைய Bowling for Columbine (2002) ஆஸ்கர்  விருது  வென்றது  குறிப்பிடத்தக்கது . நேரம்  அமையும்  பொழுது  அதனையும்  பார்த்து  வையுங்கள் .

இவரை  பற்றிய  மேலும்  ஒரு  உதறி  தகவல்  ஒரு  சிறு  புத்தகத்தில்  இருந்து  கிட்டியது  உலகில்  தாக்கத்தை  ஏற்படுத்த  கூடிய  100 மனிதர்கள்  பட்டியலில்  இவரும்   ஒருவர் .  படத்தை  பற்றி  எல்லாம்  சொல்லிவிட  ஆர்வம்  இல்லை  மேலோட்டம்  என்ன  என்பதை  மட்டும்  சொல்லி  விடுகிறேன் .


அவரது  நாட்டில்  நடந்துகொண்டிருக்கும் பொருளாதார  சிக்கல்கள் , பிரச்சனைகள்  மற்ற  நாடுகள்  எப்படி  மேற்கொள்கின்றனர்  , என்பதை  அறிவதற்காக  அவர்  எட்டு  நாடுகள்  பயணம்  செய்கிறார் , அதில் நம்மை  சிந்திக்கும்   வைக்கும்  அளவுக்கு  மக்கள்  ஊக்க  படுத்தும்  வசனங்கள் , காட்சிகள்  , சொல்லும்  கருத்துக்கள்  எல்லாம்  ஜாலியாகவும் , கருத்துள்ளவயாகவும் அமையும்  என்பதில்  எந்த  மாற்று  கருத்தும்  இல்லை .

இணையத்தில்  இந்த  படம்  பார்க்க  கிடைகிறது  நேரம்  அமையும்  பொழுது தவறாமல்  பார்த்து  வைக்கவும் , அவரோடு  நீங்களும்  எட்டு  நாட்டுக்கு  பயணம்  செய்து  தெரிந்துகொள்ளுங்கள்  ;) , ஏற்கனவே  பார்த்தவர்கள்  தங்கள்  கருத்துக்களை  சொல்லுங்கள்

நன்றி  

Post a Comment

أحدث أقدم