Unforgettable (2016) வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு திரைப்படம்

 ஒரு  புத்தகத்தை  எடுத்து  படிக்கும்  பொழுது  ஆர்வத்தில்  கிட்ட  தட்ட  முடிக்கும்  நிலையை  தொடும் நேரத்தில்   எனக்குள்  ஒரு  பதட்டம்  நிலவும் . ஐயோ  கதை  முடிந்து  விட  போகிறதோ!!  கதை  முடிந்து  விட  போகிறதோ !!!. என்று  மனதுக்குள்  எழும்  படபடப்பால்  சில  நேரம்  விட்டுவைத்து  மற்றொரு  நாள்  அந்த  புத்தகத்தை  தொடர்ந்து  படித்ததும்   உண்டு ..  அப்படி  ஒரு  இயல்பான  அனுபவத்தையும்  இதுபோன்ற  ஒரு  கற்பனை  சூழலை  என்னுள்  தந்துள்ள  உன்னதாமான  படைப்பு  தான்  இந்த  Unforgettable  .

தலைபிற்கு  ஏற்ற  மாதிரி  பார்க்கிற  ஒவ்வொரு  பார்வையாளனின்  எண்ணத்தில்  ஆழப்படிந்த , அல்லது  மறக்கமுடியாத நினைவுகளை  கல்வெட்டாக  செதிக்கி  வைத்துள்ளது , தண்ணீரில்  மூழ்கிய  என்னுடைய  தாஜ்மஹால் <3 .="" nbsp="" p="">
திரைப்படம்  தொடங்குவது  ஒரு  ரேடியோ  ஒலிபரப்பு துறையில் . அங்கு  பணிபுரியும்  ஒருவர் , தனது  நிறைய  முக்கியமான  ப்ரோக்ராம்  எல்லாம்  தள்ளி  விட்டு  ஒரு  கதை   சொல்லுவார் ?  அதென்ன  கதை ? ஐந்து  நண்பர்கள் பற்றிய  ஒரு  கதை  , அதில்  இரண்டு  பெண்கள்  , மூன்று  ஆண்கள் ,  பிறப்பிலே  ஊனமான  ஒரு  பெண் ,

அவள்  மீது  அனைவரும்  அன்பு  கடந்த  பாசத்தினை  வைத்திருந்தனர் , மகிழ்ச்சிக்கு  பஞ்சம்  இல்லாத  அவர்களின்  நட்பில் , சிறு  சிறு  சண்டைகள் அவ்வபோது  வருவதுண்டு ..   அவளுடைய  ஊனமான அந்த  கால் குணமடைய  தினமும்  அங்குள்ள  மருத்துவமனைக்கு  செல்வதுண்டு ,, அவளுடைய  கால்   குணமடைந்ததா ?   இந்த  கதையை  தொடக்கத்தில்  ஏன்  சொல்லுகிறார் ? அந்த  ஐவரும் ? எல்லா  கேள்விகளுக்குமான  பதில்  படத்தில்  உள்ளது  நிச்சயமாக  காணவேண்டிய  உன்னத  படைப்பு ..  தண்ணீரில்  மூழ்கடிக்கும் நினைவுகளாக :) .



எல்லாத்தையும்  விட  பல  காட்சிகளை  காட்சிபடுத்த   பட்டிருக்கும்  விதத்தை  பார்க்கும்  பொழுது , நான்  இறப்பதற்குள்  இதுபோன்ற  இடங்களுக்கு  ஒருமுறையாவது  செல்லவேண்டும்  என்ற  ஏக்கத்தினையும்  எதிர்பார்ப்பையும்  பன்மடங்கு  உயர்த்தி  விட்டு  போகிறது , ஒரு சில   படங்கள்  பார்க்கும்  பொழுது  இதுபோன்ற  எண்ணம்  எழுகிறது என்றாவது  ஒருநாள்  செல்வேன் . நிறைய  காட்சிகள்  என்னை  கவர்ந்தன  எல்லாவற்றையும்  சொல்லிவிட  ஆசைதான் , நீங்களே  பார்த்து  தெரிந்துகொள்ளுங்களேன் .

படத்தின்   இடையில்  ஒரு  மழையில்  நனைந்துகொண்டு  அவளும்  அவளுடைய  நண்பனும்  பேசிக்கொள்ளும்  காட்சி  வேறொரு  உலகத்திற்கு  அழைத்து  சென்றது  போல்  இருந்தது . இதுபோன்று ஒரு  திரைப்படம்  பார்த்து  வெகுநாள்கள்  இருக்கும் ..  என்னுடைய  லிஸ்ட்  ல்  என்றென்றும்  இருக்கும்  படமாக  இந்த  படத்தினை  வைக்கிறேன்

 .தவறமால்  பார்த்துவிடுங்கள்  , பார்த்தவர்கள்  தங்கள்  கருத்துக்களை  பகிருங்கள் .

நன்றி

#சிவஷங்கர்



1 تعليقات

  1. அருமையான படைப்பு... !
    மூன்று முறை கண் கலங்கி விட்டேன்..

    பகிர்ந்ததுக்கு நன்றி _/\_

    ردحذف

إرسال تعليق

أحدث أقدم