வாலேசா என்பவருடைய வாழ்கையில் நடந்த கதைதான் இந்த திரைப்படம் , ஒரு சாதாரண மனிதன் எப்படி ? போலந்து நாட்டு அரசின் அதிபர் ஆகினார் என்பது ஒன் லைன். இதனை தவிர வேறொன்றும் தெரிந்துகொள்ளாமல் பாருங்கள் நிறைய சுவாரஸ்யங்கள் உங்களுக்கு காத்திருகிறது .
நிறைய இடங்களின் என்னை வெகுவாக ஈர்க்க வைக்கிறார் இயக்குனர் , வாலேசா க்கு மொத்தம் 6 குழந்தைகள் , பிரச்சனைகள் வருகின்ற பொழுது இவர் வீட்டை விட்டு செல்லும் முன்பு கையில் அணிந்திருக்கும் வாட்சையும் , மோதிரத்தையும். கலட்டி வீட்டில் வைத்து விட்டு மனைவியிடம் அடிக்கடி ஒரு வசனத்தை சொல்லிவிட்டு போகிறார் ,
ஒருமுறை குழந்தை கையில் இருக்கும் பொது கைதி செய்ய படுகிறார் , குழந்தையுடன் காவல் நிலையத்தில் இருக்கிறார் அந்த குழந்தை கத்திகொண்டே இருக்கிறது அதன் பிறகு ஒரு காட்சி
அந்த இடங்களில் லாம் எழுந்து கை தட்டலாம் என்றே தோன்றியது . உக்காந்து மட்டும் கை தட்டிவிட்டேன் .
திரைப்படத்தை பார்க்க தொடங்குவதற்கு முன்பு இயக்குனரை பற்றி தெரிந்துகொள்ளலாம் ன்னு மொபைலை கையில் எடுத்தேன் , உலகில் மிக சிறந்த. மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் Andrzej Wajda இந்த படம் வெளிவந்த பொழுது அவருக்கு வயது 87 ,
தற்போது 90 , அவருடைய கடைசி படம் அடுத்த வருடம் வெளிவருகிறது , அதற்கு முன்பே திரைப்பட விழாகளில் வெற்றிகரமாக கொண்டாடிக்கொண்டு வருகிறது . வருத்தமளிக்க கூடிய செய்தி என்னவென்றால் இதை பார்க்க இயக்குனர் இல்லை . இந்த வருடம் காலமானார் .
உயரிய பல விருதுகளை வென்ற இவர் இதுவரை 56 படங்களை இயக்கி இருக்கிறார் , . இவருடைய இயக்கத்தில் நான் பார்க்கும் முதல் படம் இதுதான் என்று நினைக்கிறன் . கடைசி படத்தின் முன்னோட்டத்தை சமீபத்தில் பார்த்தேன் அவர் இன்னும் வாழ்ந்திருக்க வேண்டும் . , அவர் படங்கள் மூலம் அவர் வாழ்வார் :(
நன்றி
தவறவிடமால் பாருங்கள் சிறப்பம்சமாய் இருக்கும் , சில இடங்களில் சிரிக்கவும் வைக்கும்
Post a Comment