திடிரென்று ஒரு நாள் ..

கணவனை இழந்த மனைவி சாரா   , தன்னோட  மகன்  சூசந்த் மற்றும் அவனுடய  செல்ல  பிராணி டாபர்(நாய்)  என்று  ஒரு  சிறிய வீட்டில்  வசித்து  வருகிறாள் . அவளுடைய  கணவன் ஜேக் . அவர்  அதிகம்  குடிபழக்கத்திற்கு  அடிமையானவர்  ஆக  இருந்தாலும்.  தன்னுடைய   ஒரே  மகன்  மீதும் அவன்  மனைவி  மீதும்  அன்பு  கடந்த  பாசத்தினை  வைத்து  இருந்தான் .

தன்  மகனின் பள்ளி  விழாவிற்காக  அவனோடு  சென்று  இருந்தால்  சாரா .. வீட்ற்கு  வந்து  பார்க்கையில்  இறந்த  கோலத்தில்  இருந்தான். அவளுடைய  கணவன்   , வீட்டில்  எந்த  ஒரு  பிரச்னையும்  இல்லை  இப்படி  தீடீரென்று  இறக்க  என்ன  காரணம்?  என்று  தெரிவில்லை.  இவளால்  இந்த  இழப்பை  பொறுத்துக்கொள்ள  முடிவில்லை ,



இந்த  எண்ணங்கள்  மறைவதற்காக  கொஞ்சம்  நாள்கள்  தன்னுடைய  தோழி  வீட்டில்  தங்குகிறார்கள். அவளும்  அவளுடைய  மகனும் , அங்கு  சென்றும்  அவள்  சிறிது   கூட மாற்றம்  அடையவில்லை  அதிகம்  தனியாக  பேச  ஆரம்பித்தால் , இரவில்  சுவர்களிடம்  பேசினால்  , ஆனால்  இறப்பதற்கு  முன்பு  தன்னுடைய  மனைவிக்கு  ஒரு  மெசேஜ்  அனுப்பி  இருக்கிறான் ஜேக் , நான்  தற்கொலை  செய்து  கொள்ள  போகிறேன்  என்று .

 தன்னுடைய  மனைவிக்கு  எப்போதுமே  இவன்  மெசேஜ்  அனுப்புவதில்லை  எந்த  ஒரு  சின்ன  விசியமாக  இருந்தாலும்  கால்  செய்து  பேசிவிடுவது  இவனுடைய  வழக்கம் .. அப்படி  இருக்கையில்  எப்படி  நான்  தற்கொலை  செய்ய  போகிறேன்  என்று  அனுப்பி  இருக்க  முடியும் , என்று  இவளுக்குள்ளே  பல  கேள்விகளை  எழுப்பி பொலம்பி  கொண்டு  இருக்கிறாள் .

 தீடீரென்று   ஒருநாள் அவளுக்கு  ஒரு  கால்  வருகிறது அதுவும்  இறந்த  தன்  கணவனிடம்  இருந்து , ஒரே  பதற்றத்துடனும்  பயத்துடனும் ஆர்வத்துடனும்  அட் டென் ...........  ... ???

அடுத்த  பக்கத்தை  திரும்பி  பார்த்தல்  பரட்டோ  மாஸ்டர்  தேவை  என்ற  விளம்பரம்  இருக்கிறது,  சில்லி  கடை  மாரிமுத்து  அண்ணே  இந்த  பேப்பரோட  மீதியை  தாங்க  முழு  கதைய  படிக்கணும்  ன்னு  கேட்டா  பழைய  பாக்கி  இப்ப  சாப்டதுக்கு  எல்லா சேர்த்து   காச  குடுத்துட்டு  கிளம்பு  ன்னு  கடுகடு  ன்னு  பேசுறாரு .. நீங்களே  சொல்லுங்க  மக்களே   ..  விறு   விறுன்னு  கிளம்புற  நேரத்துல  வந்து  இப்படி  பண்ண  என்ன  அர்த்தம் . அட  குடுங்க  அண்ணே , அடேய்  அதெல்லாம்  எங்க  இருக்குன்னு  தேடனும்  எனக்கு  பல  வேலை  இருக்கு காச  குடுத்துட்டு  கிளம்பு ..

அட  என்ன  அண்ணே  சும்மா  காசு  காசு  ன்னு  என்  கதைய  மக்கள்  பாத்துகிட்டு  இருக்காங்க  அண்ணே  என்ன  இந்நேரம்  கழுவி  கழுவி  ஊத்திட்டு  இருப்பாங்க , கழுவுனா  காய  வெக்க  சொல்லு  டா  , என்ன  காய  வெக்க  சொல்லுடா  பழத்தை   வெக்க  சொல்லுடா  ன்னு  உருப்படி  இல்லாத  பழைய  காமெடி  சொலிகிட்டு  இருக்க  அண்ணே ,  இந்த  கைல  மீதி  பேப்பரை  வை அந்த   கைல  காச  வாங்கிக்கோ ...

உதிரி  தகவல் :
   அந்த  கதைல  வர  எல்லோரும்  உயிரோட  இருக்காங்களா  இல்லையான்னு  எனக்கு  தெரில.  சில்லி  கடை  மாறி  முத்து   அண்ணே  இப்ப  இல்ல  :(

#பழைய  டைரியில்  இருந்து  கிடைத்தது  உங்கள்  பார்வைக்காக

தேதி 11-11-2011 இதே  நாளில்  எழுதி  வைத்து  இருக்கிறேன். 

Post a Comment

Previous Post Next Post