Ek Din Pratidin (1979) ஒரு நாளும் ஒவ்வொரு நாளும்

Ek Din Pratidin (1979)  இயக்குனர்  மிர்னல்  சென்
1980 ஆண்டு  கென்னிஸ்  திரைப்பட  விழாவில்  திரையிடப்பட்டது , நாவலை  முன்வைத்து இயக்கி  இருக்கும்  இந்த  திரைப்படம்  நமது  சமுதாயத்தில்  நிலவும்  முக்கியமான  ஒன்றை  தெளிவாக  சொல்கிறது. நிச்சயமாக  பார்க்க  வேண்டும்  , ஏன்  பார்க்க  வேண்டும்  என்பதை  சுருக்கமாக  சொல்லி  விடுகிறேன் .

ஒரு  சாதாரண  குடும்பத்தில்  வசிக்கும்  பெண்  அவள்  சம்பாத்தியத்தில்  தான்  குடும்பமே  இயங்குகிறது  அவளுக்கு  இரண்டு  தங்கைகள்  , ஒரு  தம்பி , தினமும்  வேலை  முடித்து  விட்டு  சரியாக  இந்நேரமெல்லாம்  வீடு  திரும்பி  விடுவாள் , இன்று  இவ்வளவு  நேரம்  ஆகியும்  வர  வில்லை , தாயும்  தந்தையும்  நேரம்  ஆக  ஆக  மனசு பதற  ஆரம்பிக்குது ,


, வீட்டில்  ஒரு  பெண்  காணமல்  போகிறாள் , அக்கம்  பக்கத்தினர் , உறவினர்கள் , ஊருக்கு  நாலு  பேர்  என்று  சொல்வார்களே  அந்த  நாலு  பேர் என  ஆளுக்கு  ஒரு  கதை  கட்டி  விடுவார்கள் ,  ஊர்காரங்க  என்னனமோ  சொல்ல படபடப்பு  அதிக மாகுது  காவல்  துறைல  புகார்  கொடுக்குறாங்க ??  இறுதியில்  என்ன  ஆகி  இருக்கும்  என்பதை  பார்த்து  தெரிந்துகொள்ளுங்கள் .

திரைப்படம்  முன்வைக்க  பட்டிருக்கும்  கருத்து   வேறு  அதை  பார்த்தல்  தான்  புரிந்துகொள்ள  முடியும் , நான்  அதை  சொல்ல  மாட்டேன்  பார்த்துவிட்டு  நீங்கள்  வந்து  என்னிடம்  சொல்லுங்கள்  எதை  முன்வைத்துள்ளது  என்பதை ,
அந்த  காலத்திற்கு  தகுந்தார்  போல்  ஒரு  கதை , அந்த  காலத்திற்கு  மட்டும்  அல்ல  இந்த  காலத்திற்கும்  பொருந்தும்  .

நான்  இந்த  திரைப்படம்  பார்த்து  கொண்டிருக்கும்  போதே  என்  மனதிற்குள்  இன்னொரு  திரைப்படம்  வந்து  சென்றது, தமிழில் சில நேரத்தில் சில மனிதர்கள் என்ற  திரைப்படம்.    மிக  சிறந்த  படங்களில்  ஒன்று , இது  ஏன்   நினைவில்  எனக்கு  வந்திருக்க  வேண்டும்  என்பதை  நீங்கள்  இந்த  படத்தையும்  கட்டயாம்  பார்த்து  தெரிந்துகொள்ள  வேண்டும் .


நன்றி

#சிவஷங்கர்

Post a Comment

Previous Post Next Post