Black Friday - கருப்பு வெள்ளி , பார்த்தே தீரவேண்டிய திரைப்படம்




பாம்பே குண்டுவெடிப்பு (Friday மார்ச் 12 1993) உண்மை சம்பவத்தை அடிப்படயாக கொண்டு எழுதப்பட்ட Black Friday – The True Story of the Bombay Bomb Blasts புத்தகத்தை மையபடுத்தி அனுராக் இயக்கிய படமே இந்த கருப்பு வெள்ளிகிழமை .



படத்தை பற்றி சொல்லணும் என்றால், அன்று நடந்த குண்டு வெடிப்பு இன்வெஸ்டிகேசன் தான், நிறைய நிறைய கதைகள் புதுசு புதுசா வெளிவர, கதைக்குள் கதை தாவுத் இப்ராஹீம், டைகர் மேனன் இதுலெல்லாம் யார்? யார்? சம்மந்தம் பட்டுருக்காங்க தீவிர விசாரனையே இந்த படம். ஒவ்வொரு காதாபாத்திரத்தின் முக்கியத்துவம் இந்த திரைக்கதையில் தெரிகிறது.இறுதியில்  அணைத்து  கேள்விகளுக்கும்  பதில்  கிடைத்ததா  என்பதை  பார்த்து  தெரிந்துகொள்ளுங்கள் .


Kay Kay Menon இவருடைய விசாரணையிலே நகரும், போக போக ஏகப்பட்ட கதாபாத்திரங்கள், திரைகதை வடிவமைப்பு பிரம்மாதம்.. Chapter , chapter ஆக கொண்டு வந்திருப்பாங்க படத்தின் நீளம் 2h 41min , அதிகம் தான் அலசல்கள்  அதிகம் , இருந்தாலும் பொறுமையாக பார்த்தல் தான் உங்களால் புரிந்துகொள்ள முடியும் ஒன்னும் இல்லை முதல் 35 நிமிசத்திற்கு பிறகு ஒருசில காட்சிகளை புரிந்துகொள்ள முடியவில்லை மீண்டும் அதை பார்த்துதான் புரிந்துகொண்டேன். அதாலால்  பொறுமை  மிக  அவசியம்  அதோடு  இன்னொருமுறை  பார்ப்பது  நல்லது .

படம் பார்க்க விரும்புவர்கள் முழு கவனத்தையும் இதில் மட்டுமே செலுத்தினால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். நானும் எங்கயாவது ரீவீவ் எழுதி இருக்காங்களா ன்னு படம் பார்பதற்க்கு முன்னாள் தேடுனேன் காரணம் subtitle இல்லை. இருந்தாலும் திரைப்படத்திற்கு மொழி அவசியம் இல்லை என்று யாரோ சொன்னதை வைத்து பார்த்தேன்.



அனுராக்  காஸிப்  எடுக்கும்  ஒவ்வொரு  படமும்  என்னை  எதோ  ஒரு  விதத்தில்  மிகவும்  கவர்ந்து  விடும் .. சிறந்த  படைப்பாளர் இன்னும்  அவரிடம்  புதைந்து  கிடைக்கும்  எத்தனையோ  கதைகள்  திரைப்படமாக  வரும் , திரைத்துறையில்  இயக்கம்  திரைககதை  பிரிவில்  நுழைய  நினைபவர்கள்  இவருடைய  படங்களை  பார்ப்பது  உதவியாக  இருக்கும் .

குறிப்பு: இப்படி பட்ட படங்களை உங்களால் பார்க்க முடிந்தால் மட்டும் பார்க்கவும் பார்த்த பிறகு பொறுமை போதாதுநேரம் அதிகம் லாம் சொல்லாதிங்க அப்படி பட்டவங்க பார்த்த உங்கள் நண்பர்களிடம் கலந்துரை செய்துகொள்ளுங்கள்.

பார்த்தவர்கள்  தங்கள்  கருத்துக்களை  பகிருங்கள் , பார்க்காதவர்கள்  விரைவில்  பாருங்கள் .
நன்றி

#சிவஷங்கர்

Post a Comment

Previous Post Next Post