சமூகத்தில் பெண்களுக்கு இருக்கும் பிரச்னைகளை அடுக்கிகொண்டே போகலாம் , அப்படி துருக்கியில் வசிக்கும் பெண்களின் சுதந்திரத்தை முன் வைத்து Deniz Gameze இயக்கி இருக்கும் படம் தான் Mustang, நிறைய திரைப்பட விழாக்களில் திரையிட பட்டு பல விருதுகளை குவித்துள்ளது திரைப்படம் .
திரைப்படத்தை பார்த்து முடித்த பிறகு இந்த கதையை Deniz Gameze இயக்குனர் முன்வைக்க காரணம், என்ன? என்று? கொஞ்சம் கூகுளை நாடினேன் , எனக்கு கிடைத்த தகவல்கள் கொஞ்சம் அதிர்ச்சி யாகவும் இருந்தன , அந்த நாட்டில் வசிக்கும் 80% சதவிகதம் பெண்களுக்கு கல்வி அறிவு இல்லை , அந்த 80 % சதவிகித பெண்களும் 15 வயதிற்குள் திருமணம் செய்துகொண்ட சிறுமிகள் .
அதை விட அவர்கள் மேல் திணிக்க படும் ஆதிக்கமும் வன்முறையாழும், கிட்ட தட்ட ஒரு லட்சம் பேரு ஒரு வருடத்தில் உயிர் இழந்து கொண்டு இருகின்றனர் , அதிலும் 15 to 20 வயதுகுள்ளானவர்கள் தான் அதிகம் .
உங்களை ஒரு பெண்ணாக நினைத்துகொள்ளுங்கள் 15 வயதிற்குள் திருமணம் , எந்த ஆணிடமும் பேச கூடாது , முகத்தில் கண்களும் வாயும் மட்டும் தான் தெரியவேண்டும். மீதி எல்லாம் துணிகளினால் முழுவதும் கவரபட்டிருக்க வேண்டும் , எங்கேயும் செல்ல கூடாது , சிறுவயது திருமணம். படிப்பை பாதியில் நிறுத்துதல். கல்வி அறிவின்மை , இப்படி பல விசியங்களை உங்கள் மேல் திணித்தால் என்ன செய்யவீங்க .?
இந்த திரைப்படத்தில் ஐந்து பெண்ககளை முன்வைத்து நகருகிறது , தன்னுடைய பாட்டியுடன் வசித்து வரும் இவர்கள். வசிக்கும் பகுதிக்கும் நகரத்திற்கும் நடந்தே போகணும் நா பொழுதாகிவிடும் , அப்படி ஒரு ஊரில் வசித்துக்கொண்டு இருக்கும் இவர்களுக்கு எந்த ஒரு சுதந்திரமும் இல்லை , பள்ளிக்கி சென்று கொண்டு தான் இருந்தார்கள் , நிறுத்த படுகிறார்கள் , ரூமை விட்டு வெளி வரமுடியாத சூழல் இவர்கள் அங்கிருந்து வெளிய செல்ல முடியாதவாறு என்ன என்ன செய்ய முடியுமோ அதனையும் செய்ய படுகிறது ? இறுதியில் என்ன ஆனது என்ன ஆகி இருக்கும் ?? பார்த்தே ஆக வேண்டும் என்று நான் சொல்லிவிட்டு போய் விடுவேன் , பார்த்தல் தான் தெரிந்துகொள்ள முடியும் .
இன்னும் துருக்கியில் அல்லல் பட்டு கொண்டிருக்கும் பெண்களின் விடுதலைக்காக தான் நான் என்னுடைய இந்த படத்தை இயக்கி இருக்கிறேன் , என்று Deniz Gameze ஒரு நிகழ்ச்சியில் சொல்லி இருக்காங்க , பாருங்கள் நாம் வசிக்கும் நாட்டில் இன்னும் எதனை அல்லல்கள் இருக்குன்னு தெரிந்துகொள்ளுங்கள்
நன்றி
#சிவஷங்கர்
إرسال تعليق