Train to Busan (2016) மிரள வைக்கும் கொரியன் ஜோம்பிக்கள்

ஜோம்பி படங்களுக்கு ரசிகர்கர்களா நீங்க, இல்ல இப்பதான் முதல் முறை ஜோம்பி படம் பாக்க போறீங்களா நிச்சயமா இந்த படத்த நீங்க பார்த்தே ஆகணும் ன்னு சொலிட்டேன். கதைய சொல்லமாட்டேன் ஏன் நீங்க பாக்கணும் ன்னு சொல்லுறேன்...




விவாகரத்தான ஹீரோ தனது மகளின் பிறந்தநாள் அன்று மகளின் ஆசைக்காக தாயை சந்திக்க கிளம்புகின்றனர் , அவர்கள் செல்லும் அதே ட்ரெயின் ல் ஒரு பெண் காலில் அடிபட்டு தடுமாறி தடுமாறி எப்படியோ உள்ளே வந்து விழுகிறாள். அதிலிருந்துதான் நமக்கு என்ன நடக்கும் ன்னு தெரியுமே.. காலங்கலாமா ஜோம்பி படங்களில் வருகின்ற மாதிரி பாதிக்கப்பட்டவர் இன்னொருத்தர கடிக்க அவங்க ஜோம்பி ஆக அவங்க இன்னொருத்தர கடிக்க, ன்னு வெறித்தனமாகவும் சின்ன சின்ன லாஜிக் ட்விஸ்ட் ஓட  விறுவிறுப்பாகவும் கதை கிளம்புகிறது...

தந்தைக்கும் மகளுக்கும் உருக்கமான பாசத்தையும்,கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றி கருவில் இருக்கும் தனது குழந்தையையும் காப்பாற்ற வேண்டும் என செண்டிமெண்ட் காட்சிகளை கொண்டு கதைய சிறப்பாக நகர்த்தி இருக்கார்கள். இறுதியில் கர்சீப் லாம் கண்டிப்பா தேவைபடும்இதிலிருந்து அவர்கள் எத்தனை பேர் தப்பித்தார்கள் என்ன என்பதெல்லாம் மீதி கதை.. 


முதல் பாதி எவ்வளோ மிரட்டலா கிளம்புதோ அதே மிரட்டல் தான் இரண்டாம் பாதியும், எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
நான் பார்த்து ரசித்த ஜோம்பி படங்கள் வரிசியையில் இந்த படத்திற்கும் ஒரு நீங்கா இடம் உண்டு, ஒருநல்ல செய்தி என்ன வென்றால் இரண்டாம் பாகத்திற்கு தயாரிகிறது, தமிழ்  மொழிமாற்றம்  செய்து  கூடிய  விரைவில்  வெளியாகும்  அட்டகாசமான படம் தவறமால் பார்த்து வையுங்கள் பார்த்தவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் தங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

நன்றி

#சிவஷங்கர்

Post a Comment

أحدث أقدم