<3 span="">3> முதல் பாதியில் காதலும் காமெடியும் கலந்த அழகான கதை நகரும் அதற்கு பிறகு மெயின் கதை. ஹீரோ நகைச்சுவை திறமை மிகுந்தவர். ஒரு நாள் டோராவை சந்தித்த பொழுதே காதலில் விழுகிறார். மீண்டும் அவளை சந்திக்க சந்தர்பங்களை ஏற்படுத்தி கொள்கிறார்.. ஒருவழியா திருமணம் முடிந்து ஜோஷுவா பிறக்கிறான் அவனுக்கு Tanker(பீரங்கி) என்றால் மிகுந்த விருப்பம்..
<3 span="">3> இரண்டாம் உலக போருக்கு பிறகு ஜெர்மனி, இந்த நாட்டில் உள்ளவர்களை இழுத்து(கைதி பண்ணி) சென்று அவர்களுக்கு கீழ் அடிமை படுத்தி வேலை வாங்கிகொள்கிறது.. அது மட்டும் இல்லாமல் சிலரை கொன்றும் விடுகிறார்கள்.. இது எல்லாம் தன் மகனிடம் இருந்து மறைத்து உன்னுடைய பிறந்தநாள் காக நாம இங்க வந்திருக்கோம் இது ஒரு விளையாட்டு இதில் நாம் ஜெயித்தால் நமக்கு பரிசாக பெரிய Tank கிடைக்கும் ,
<3 span="">3> அதற்கு நாம ஆயிரம் பாய்ண்ட்ஸ் எடுக்கணும்.
என்றெல்லாம் சொல்ல அவனும் தந்தை சொல்லே மந்திரம் என்று சொல்வதெல்லாம் கேர்கிறான்...
அங்கு அவர்கள் வயதானவர்களையும் சிறுவர் சிறுமியர்களையும் கொஞ்ச நாள்களில் கொன்று விடுவார்கள் அதிலிருந்து எப்படி காப்பாற்றினார்??
இறுதியில் என்ன ஆனது? அவன் மீண்டும் அவனுடைய அம்மாவுடன் சேர்ந்தானா .? மீதி என்ன என்பதெல்லாம்.. சத்தியமாக நீங்க பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
<3 span="">3> பொதுவாகவே நாம நம்ப குழந்தைகள் கிட்ட நிறைய பொய் சொல்லுவோம் அங்க போகாத ரெண்டு கண்ண வந்திடுவான், இங்க போகாத பேய் வந்திடும் அது இதுன்னு ஏகபட்ட பொய் சொல்லிருப்போம்... இந்த படத்துல தன்னோட மகனுக்காக தந்தை என்னென்ன லாம் சொல்றாரு பாருங்க.
<3 span="">3> படத்தில் கதாநயாகனாக நடித்திருக்கும் Roberto Benigni அசத்தி இருக்கிறார். இவர்தான் இயக்குனரும் . இந்த படம் மூன்று ஆஸ்கர் விருதுகளையும் சிறந்த படத்திற்கான விருதுகளை நிறையவும் குவித்திருக்கிறது
உணர்வுபூர்வமான ஒரு சிறப்பான திரைப்படம் பார்த்து வெகுநாள் ஆகி விட்டது.. இந்த படத்தை பார்க்க சொல்லி எனக்கு பரிந்துரைத்த அனைவருக்கும் மிக்க நன்றி..
பார்த்தவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லவும், தங்கள் நண்பர்களுக்கும் படத்தை பார்க்க சொல்லி பகிரவும்,பார்க்காதவர்கள் விரைவில் பார்க்கவும்
#சிவஷங்கர்
إرسال تعليق